Header Ads



ஜப்பானிய முதலீட்டை இலங்கையில், விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக..


ஜப்பானிய முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வதற்காக, ஜப்பானிய தூதுக் குழு இலங்கை வருகை தந்துள்ளது.


ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் மற்றும் ஜப்பானிய வர்த்தக, வாணிப மற்றும் கைத்தொழில் துறைப் பிரதிநிதிகள் குழு மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையே (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.


இலங்கையில் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்திய ஜப்பானிய தூதுக்குழு, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இது குறித்து ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.

2025-07-25

No comments

Powered by Blogger.