Header Ads



நொறுக்குத் தீனி பொதிக்குள் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருந்த நாசகாரப் பொருட்கள்


5 கோடி இற்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் 25 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


பயணப் பைக்குள் இருந்த 25 நொறுக்குத் தீனி பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 700 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த பிறகு, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்து,  விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, அவரது பயணப் பைக்குள் இருந்து குஷ் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.