Header Ads



IPL போட்டிகள் ஒத்திவைப்பு


இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. 


இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

No comments

Powered by Blogger.