Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர், சாலி முஹமது நளீம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வபாத்


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்டம் கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியைச் சேர்ந்த, 42 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான சாலி முஹமது நளீம் என்ற சந்தேக நபர் நேற்று (04) மாலை உயிரிந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். 

உயிரிழந்துள்ள சந்தேகநபர் மௌலவி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 2019.05.22 திகதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தங்காலை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார். 

இதன் போது குறித்த சந்தேக நபருக்கு நோய் நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பா் மாதம் 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். 

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிசம்பா் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். 

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா். 

தற்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

அததெரண

1 comment:

  1. மோடிக்கும இந்தியாவுக்கு ம் இனியாவது இடி விழாதா? நாசமா போன நயவஞ்சகன் மோடி இலங்கையில் முஸ்லிம்கள் நன்றாக இருப்பதை தாங்க முடியாமல் செய்த சதியின் விளைவு இதற்கு ரணில் ஒரு முக்கிய பங்காளி. அவன் தான் சந்திரிகா அம்மையார் காலத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முஸ்லிம்கள் பற்றி அவர்களுக்கு அதிக சலுகை இலங்கையில் வழங்குவதாக பதறிப்பதறி ஓடிஓடி கோள்மூட்டி காட்டி கொடுத்து வந்த நாய் இதில் இலங்கை பாசிச புலிகளின் தலைவர் கூட்டம் பெரும்பங்காற்றி வந்தனர் அதற்கு சன்மானம் தமிழ் மக்களின் கோரிக்கை களுக்கு மட்டுமே ரணில் தலைசாய்த்து வந்தான் ரவூபஹக்கீம் க்கு வெறும் வைக்கோல மட்டுமே கொடுத்து பேக்காட்டிவிட்டான். தற்போது முழு நாட்டிலுமே இஸ்லாமிய விரோதிகள் உருவாக்க இந்த ரணில் உள்ளிட்ட தமிழ் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் தான் முக்கிய காரணம் இவர்கள் அனைவரும் இஷ்ரேல் இந்திய கூட்டணி களுக்கு இலங்கையில் ஏஜென்சி கூட்டம். இறுதியில் சத்தியமே வெல்லும் .

    ReplyDelete

Powered by Blogger.