Header Ads



ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்து, 250 மில்லியன் டொலர் எரிபொருள் கடனை அடைக்க முயற்சி


இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் அலிரெஸா பேமன்பெக் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டளவில், ஈரானின் சந்தையில் 47 சதவீதமாக காணப்பட்ட இலங்கையின் தேயிலைத்துறை, 2020ஆம் ஆண்டில் 25 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. 

கொடுப்பனவுகள் மற்றும் ஈரான் ரியாலின் பெறுமதி வீழ்ச்சி என்பன இதற்கான காரணமாகும் என பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளதன் மூலம், இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால், ஈரானின் தேசிய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய, 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பதற்கும் இந்த உடன்படிக்கை மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தற்போதைய தேயிலை உற்பத்தியையும் ஏற்றுமதியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், குறிப்பாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலையின் அளவைப் பொறுத்து இருநூற்றிஐம்பது மில்லியன் டொலர்கள் கடன்களை அடைப்பதற்கு இன்னும் 335வருடங்களுக்கு இலங்​கை ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய வேண்டும். இது மக்களை ஏமாற்றுவதற்கான அரசின் பகற்கனவு.

    ReplyDelete
  2. இந்தியாவின் ஏப்ரல் 21 கடணை எப்படி அடைப்பார்களோ?

    ReplyDelete

Powered by Blogger.