Header Ads



அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் பயணங்களுக்கு தடை ஏற்படுத்துவோர் வெளியேற்றப்படுவர்


ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களுக்கு இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் பயணங்களுக்கு தடை ஏற்படுத்துவோர் வெளியேற்றப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினை ஆட்சி பீடத்தில் ஏற்றினால் அந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலிறுயுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் பயணத்திற்கு தடை ஏற்படுத்தும் தரப்பினர் ஆளும்கட்சியா எதிர்க்கட்சியா அல்லது வேறும் சக்திகளா என்பது பற்றி கரிசனையில்லை. அவ்வாறான அனைத்து தரப்பினரையும் எமது பாதையிலிருந்து அகற்றுவதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால தலைமுறையினருக்கு நல்லதொரு நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து தரப்புக்களும் பாதையிலிருந்து அகற்றப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் விமல், வாசு மற்றும் உதய கம்மன்பிலவிற்கு இந்த எச்சரிக்கையை சாகர காரியவசம் விடுத்துள்ளாரா என தெற்கு ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. TW

No comments

Powered by Blogger.