Header Ads



ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி, அதற்குதெரிவுசெய்யப்பட்ட குழு, ஒற்றை கயிற்றில்முடியப்பட்ட 2 முடிச்சுக்கள்


"ஒரே நாடு ஒரே சட்டம்" இந்த திட்டம்இலங்கைவாழ் சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பதே முதலில் பார்க்கவேண்டிய விடயம். அதுதான் முதல் சிக்கல்! அந்தசெயலணிக்கு தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மற்றும்உறுப்பினர்கள் தாம் இரண்டாவது சிக்கலானமுடிச்சு.

 பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில், பல்வேறுகலாச்சாரங்களும் வழிபாட்டு முறைகளும்இருக்கின்றன. தான்விரும்பிய மத நம்பிக்கையைபின்பற்றுவதும், கலாச்சாரங்களைசெயல்படுத்துவதும் அவரவர் அடிப்படை உரிமை. அந்த உரிமைகள் மறுக்கப்படும் புள்ளியில்இருந்துதான் எதிர்கேள்விகளும், எதிர்ப்புக்களும்உருவாகின்றன. அதுவே சிறுக சிறுக ஒன்றுசேர்ந்துசமூகங்களின் மத்தியில் பெரும் பிளவுகளைஏற்படுத்திவிடுகின்றன.

 ஒரேநாடு ஒரே சட்டம் என்ற பதத்தின் கீழ் இந்தஅரசாங்கம் உருவாக்கியுள்ள செயற்திட்டத்தினைஆழமாக பார்க்கவேண்டிய தேவையுள்ளது.ஏற்கனவே பெரும்பாண்மை சமூகத்தினைதிருப்திப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில்முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறுஅடக்குமுறைகளை வெளிப்படையாகவேஅரசாங்கம் செய்துவருகின்றது. சிறுபான்மைசமூகத்துடன் உடன்பாட்டு அரசியல் செய்துவந்தகாலமெல்லாம் தலைகீழாக மாறி முரண்பாட்டுஅரசியலே தற்போதைய அரசின் வெற்றியெனஎண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

இஸ்லாமிய விவாக சட்டம், திருமண சட்டம், காதிநீதிமன்றங்கள் போன்றவற்றில் தன்னிச்சையாகமுடிவெடுக்கும் அரசாங்கம், நம்மவர்கள் சிலருக்குஅதுசார்ந்த அதிகாரங்களைபலப்படுத்திக்கொடுத்து தங்கள் திட்டங்களைசட்டபூர்வமாகவே நிறைவேற்றிக்கொள்கிறது.ஆனால் கண்டியர் சட்டத்திற்கோ, தேசவழமைசட்டத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லாதவாறுபாரபட்சம் காட்டும் இந்த அரசின் நிலைப்பாடுவெளிப்படையாக தெரிகின்றது. ஆனால் யார்அதனை கேள்விகேட்பார்?

ஒரேநாடு ஒரேசட்டம் என்பது இலங்கையின்பொதுவான சட்டங்களின் மீது மட்டும்வடிவமைக்கப்படுமென்றால் அதுவரவேற்கத்தக்கதாக இருக்கும். அவ்வாறுஅமையுமெனில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்என பாராது அனைவருக்கும் பொதுவான சமமானநீதி இந்நாட்டில் நிலைநாட்டப்படும்.

 

அவ்வாறில்லாமல், சிறுபான்மை சமூகத்தின்வழிபாட்டிலும் கலாச்சாரத்திலும் "ஒரே நாடு ஒரேசட்டம்" தாக்கம் செலுத்துமாக இருந்தால் அதுமிகப்பெரிய அடிப்படை மீறலாக அமையும். அல்லாஹ்வையும், குர்ஆனையும் விமர்சித்துப் பேசியதேரர் ஒருவரை, அழுத்கம, திகன கலவரங்களின்பிரதான சூத்திரதாரியொருவரை, பெரும்பான்மைசமூகத்தின் மத்தியில் இனவாத கருத்துக்களைபுகுத்திய பிரதான நபரொருவரை, நீதியைநிலைநாட்டும் உச்ச இடமான நீதிமன்றத்தையேஅவமதித்த குற்றச்சாட்டில் சிறைச்சாலைக்குசென்றுவந்த ஒருவரையே "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணியின் தலைவராக நியமித்திருப்பதுமிகப்பெரிய அநியாயம்.

அந்த தலைவர் நியமனமொன்றே "ஒரே நாடு ஒரேசட்டம்" மீதான சந்தேகத்தையும் அச்சத்தையும்அதிகரித்துள்ளது. கண்பார்வையற்றவனைகாவலுக்கு வைத்தது போல குற்றவாளியிடம்சென்றே தீர்ப்பு பெற சொல்கிறது இந்த இனவாதஅரசாங்கம்! 

"ஒரேநாடு ஒரே சட்டம்" மீதான எதிர்ப்பினைதெரிவித்து கீழேயுள்ள முகவரிக்கு மின்னஞ்சல்அனுப்புங்கள்.அல்லது கடிதமாவது அனுப்புங்கள். மற்றவர்கள் செய்வார்கள் என்று நீங்கள் இருந்துவிடவேண்டாம். ஒவ்வருவருக்கும் நமது உரியமைகளைபாதுகாக்கும் கடமையுள்ளது. இந்த கடிதம் எழுதும்சந்தர்ப்பமொன்று நமக்கு கிடைத்துள்ளது. அதனைநேரமொதுக்கி எழுதி அனுப்புங்கள். சமூகத்திற்காகபோராடுவதற்குரிய சிறு சந்தர்ப்பம்! 

முயற்சி செய்வோம்! அல்லாஹ் நமது சமூகத்தின்உரிமைகளை பாதுகாப்பானாக!

-அப்துல் ரஹ்மான் ஹனீஃபா (புத்தளம்)

3 comments:

  1. email address please.

    ReplyDelete
  2. மின்னஞ்சல் முகவரியைக் காணவில்லை

    ReplyDelete

Powered by Blogger.