Header Ads



மரங்களை வெட்டுவது, விற்பது, கொண்டு செல்வது கண்டிப்பாக தடை - தலீபான்கள் அதிரடி உத்தரவு


ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை விதித்து தலீபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மொத்த நிலபரப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. அதுவும் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இந்துகுஷ் மலை தொடரில்தான் பெரும்பாலான காடுகள் அமைந்துள்ளன. அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்கள் அந்த காடுகளை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மரங்களை வெட்ட மற்றும் அவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

இது குறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மரங்களை வெட்டுவது, அவற்றை விற்பது மற்றும் கொண்டு செல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் அதை தடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மனிதர்களை வெட்டுவதையும் தடைசெய்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.