Header Ads



அநுரகுமார சொன்ன அற்புதமான கதை


- Nadarajah Kuruparan -

”அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அது  மக்களின் வாழ்வோடு இணைய வேண்டும்.”

”ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களின் ஏழ்மையை விற்கிறார்கள்.”

2004 இல் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸின் எதன்ஸ் (Athens, Greece) இடம்பெற்றது. அதற்காக கிரீஸ் அரசாங்கம் வானளாவிய  கட்டிடங்களை கட்டி எழுப்பினார்கள். பெரும் மைதானங்களை நிர்மாணித்தார்கள்.

உலகெங்கும் இருந்து போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக பெரும் மாடி வீடுகளை அமைத்தார்கள்.

அந்த காலத்தில் ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து, மக்களுக்கு உரையாற்றிய கிரீஸின் எதிர்கட்சித்தலைவி,  "என்றாவது ஒருநாள்,  இந்தக் கொங்கிரீட்டுகளையே நீங்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

2008 இல் நடந்தது என்ன?  உலகத்திலேயே வங்குரோத்தான அரசாக கிரீஸ்  வீழ்ச்சி அடைந்தது.

நீங்கள் இன்று கிரீஸுக்கு சென்று பாருங்கள், அங்கு அந்த வீதிகளை,  கட்டிடங்களை பராமரிக்க முடியாமல் அரசாங்கம் திணறுவதைக் காணலாம்.

இப்போது இலங்கையில் இருந்து மத்தியதர வகுப்பினர், நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.  

அபிவிருத்தி என்பது கொங்கிரீட் காடுகள் அல்ல. அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும். 

இலங்கையின் சூரியவெவ மைதானம் இருக்கும் வீதியை  சென்று பாருங்கள், பேஸ்லைன் வீதியை விடவும், 6 பிரிவுகளைக் கொண்ட பெரிய வீதியாக கட்சி தருகிறது.  

அந்த வீதியை அண்மித்து வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது. 

பாடசாலை முடிந்து வரும் மாணவர்கள், விளாம்பழ பருவ காலத்தில்,    வீதியோரம் விளாம்பழம் விற்கிறார்கள். எலுமிச்சை பருவ காலத்தில்  எலுமிச்சையும், தோடம் பழ பருவத்துக்கு தோடையும் விற்கிறார்கள்.

விசாலமான விதி இருக்கிறது ஆனால் பாடசாலை விட்டு வரும் பிள்ளைகள், வீதியோரம் மாங்காய், விளாங்காய் விற்கிறார்கள்.  இந்த விசாலமான வீதிக்கும் மக்களது வாழ்க்கைக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை. 

மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள். 

இந்த ஆட்சியாளர்கள் எப்போதும் அந்த ஏழ்மையை விற்கிறார்கள். நாம் இதை மாற்ற வேண்டாமா? 

(ஹரேந்திர ஜயலால் தொகுத்து வழங்கும் "நாடு யாருக்கு" நிகழ்ச்சியியில் போது ஜே.வீ.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து இது.)

No comments

Powered by Blogger.