September 11, 2021

உள்ளாடைகளையும் கழற்றி விட்டார்கள் - முஜிபுர் Mp


பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்;

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2019 நவம்பரிலிருந்து பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் காலமாக மாறியுள்ள நவம்பரில் ஜனாதிபதியின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் எடுத்த தவறான வரிக்குறைப்பின் முடிவின் விளைவாக அரசாங்கம் வருவாயை இழந்துள்ளது.12% வீத வரியை 8% குறைத்ததால் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய கிட்டத்தட்ட 600,700 பில்லியன் ரூபாக்களை இழந்தது. இதன் விளைவாக, அரசாங்க வருவாய் குறைந்துள்ளதால் ஈடுசெய்யும் முகமாக, அரசாங்கம் 1250 பில்லியன் ரூபாய்களை தற்போது அச்சிட்டுள்ளது. இதன் விளைவாக, பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதோடு இதன் விளைவாக பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இன்று அந்நியச்செலாவனிக் கையிருப்பு கிட்டத்தட்ட $ 2.9 பில்லியனாக குறைந்துள்ளது.

அரசாங்கம் சர்வதேச அளவில் அரசுகளுக்கு கொடுக்கும் கடன்களை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளது, இன்று எந்த உலக நாடுகளும்  நிதி உதவியையே அல்லது அரசாங்கத்திற்கு கடன் கொடுக்கவோ  ஒப்புக்கொள்ளவதாக இல்லை. காரணம் பொருளாதார நிர்வாகத்தில் தவறான முடிவுகளால் முழு நாடும் பொருளாதார ரீதியாக நிச்சமற்ற குழப்பமாக மாறியுள்ளதால் ஆகும். நாம் பார்ப்பது என்னவென்றால், நமது பொருளாதாரப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர,அவற்றில் எதுவுமே குறைவதாக இல்லை.அதனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையும் காணமுடியவில்லை.இதற்கு பல காரணங்கள் உண்டு.

01-கொவிட் ஆரம்பம் முதலே இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.கட்டுப்பாடுகள் பிரப்பிக்கப்பட்டன.

02-அடுத்து, சில அரசாங்க சார்பு உற்ற நண்பர்களுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையுடன் சலுகைகளும் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கத்துடன் இருந்தவர்களுக்கு இந்த வழியில் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது

இதனால் எதிர்பார்த்த டொலர் கையிருப்பு அதிகரிக்காமல் குறைவடைந்ததால்.பல்வேறு விடயங்களை காலத்துக்கு காலம் கொண்டு வந்தனர்.உரங்களுக்கான இறக்குமதித் தடையை பிரயோகித்தனர். எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பெட்ரோலியத் துறை அமைச்சர் கேட்டதாக அரசாங்கம் கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளது.அது குறித்த மாறுபட்ட அனைத்து விதமான கதைகளையும் அரசாங்கம் உருவாக்கியது. எண்ணெய் விலையை அதிகரித்தது ஜனாதிபதி தான். பெட்ரோலியத்தைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். டொலர்கள் பற்றாக்குறை பற்றி அவர் சொல்லவில்லை. டொலர்கள் பற்றாக்குறையின் கதையை பெட்ரோலியத்துறை அமைச்சர் சொன்னார். அரசாங்கத்தால் இவற்றை ஈடு செய்ய முடியாதபோது, ​​அவர் பல்வேறு மாற்று விடயங்களை கூறினார். மஞ்சள் இறக்குமதி செய்வதை நிறுத்தியபோது, ​​நம் நாட்டில் மஞ்சள் பயிரடப்போவதாக கூறப்பட்டது.டொலர் பற்றாக்குறையுள்ளதாக சொல்லவில்லை. இவ்வாறு கூறி அந்த வகையில் உள்ளூர் உற்ப்பத்தியை மேற்கொண்டு தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதாக என்று கூறி மக்களுக்குச் சொல்லப்பட்டது.

இவற்றுக்கு மத்தியில் மத்திய வங்கி இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் பல கட்டுப்பாடுகளை விதித்த வன்னம் 623 பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டதையும் பார்த்தோம். அவ்வாறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், வழங்கி 100% பணத்தை வைப்பிலிட்ட  பின்னரே பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். இவை அத்தியாவசிய பொருட்கள் அல்ல என்று அரசாங்கம் கூறுகிறது.எமது பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்று எமக்கு இன்னும் தெரியாது,பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடுவது பற்றி யோசிக்கவில்லை.இணைய வழிக் கற்கைகளுக்கு பிரவேசிக்குமாறு அரசாங்கம் கூறுகிறது. ஸ்மார்ட் போன் தேவை,இல்லையென்றால் இணையவழி வகுப்புகள் செய்ய முடியாது. பிறகு அரசாங்கம் ஸ்மார்ட் போனை ஆடம்பரப் பொருளாக ஆக்கி விட்டு இணையக் கல்விக்குள் பிரவேசிக்குமாறு கூறுகிறது. கிராமங்களில் உள்ள நம் குழந்தைகள் எப்படி ஆன்லைனில் கற்க முடியும்?கிராமங்களில் உள்ள பெற்றோரால் எவ்வாறு ஒரு ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி வாங்க முடியும். ஆன்லைன் வகுப்புகளை எப்படி செய்வது என்று நாம் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.அரசாங்கம் இணையவழி கற்பிக்கத் தொடங்குகிறது என்றால், அரசாங்கம் ஸ்மார்ட்போன்களுக்கான வரிகளைக் குறைத்து, எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தொலைபேசி வாங்குவதற்கு இவற்றை மேற்கொள்ளாது இருக்க சலுகைகளை வழங்க வேண்டும். தொலைபேசிகளின் விலை உயரும் போது குழந்தைகள் எப்படி ஆன்லைனில் கற்றுக்கொள்ளுங்கள்.

மற்ற பொருட்கள் தான் டயர்கள்,டியூப், குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சிகள், சிறு குழந்தைகளின் ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. உள்ளாடை என்பது அத்தியாவசியமான பொருள் அல்ல என்று பட்டியலில் இட்டு உள்ளாடைகளும் அத்தியாவசியமற்ற பொருள் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு என்றால் இரவில் உள்ளாடை அணியாமல் தூங்குங்கள் என்று தான் கூறுகிறது போல.நாட்டு மக்களுக்கு இன்று எஞ்சியிருந்தது தனது உள்ளாடைகளே,ஆனால் இன்று அரசாங்கம் மக்களின் உள்ளாடைகளையும் கழட்டி விட்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ளவர்களும் உள்ளாடைகள் இல்லாமல் தான் இருக்கிறார்களா என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் என்று பெயரிடப்பட்ட பொம்மைகள் ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டன. அரசாங்கம் என்ன செய்கிறது? இந்த துறையில் இருக்கும் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் தான் பாதுக்கப்படபோகிறார்கள்.100% பணவைப்பு கோரப்பட்டால் இவர்களால் எவ்வாறு ஈடுசெய்ய முடியும். நாளாந்த காசோலை மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்ள முடியும்.நீங்கள் எப்படி இந்த அற்புதமான விடயங்களை செய்கிறீர்கள்? இந்த மக்களுக்கு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு செலவழிப்பு ஒன்று உள்ளது. அதை எவ்வாறு ஈடு செய்ய முடியும்.பிறகு அவர்கள் எப்படி தங்கள் தொழில்களை நடத்த முடியும்?இது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தை இல்லாதொழிக்கும் செயலாகும். அவ்வாறு இறக்குமதி செய்வதால் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை பொருட்களுக்கு அதிக விலை உயர்வு ஏற்ப்படும்.

ஒருபுறம் அரசாங்கம் என்ன செய்கிறது என்றால் மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத வன்னம் நடவடிக்கைகளை இதன் மூலம் மேற்கொண்டு பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. அதன் பின்னர் இந்த பொருட்களின் விலை உயரும்,பின்னர் தற்போதுள்ள அவசகர கால சட்டத்தின் பிரகாரம் நாடு முழுவதும் உள்ளாடைகளையும்  டயர்களையும் தேடி பரிசோதனை நடவடிக்பைகளில் ஈடுபடும்.

குளிர்சாதனப்பெட்டியை கண்டுபிடிக்க ஒரு நாடகம் ஆடப்படும். இறுதியாக உள்ளாடை கடைகளுக்கும் இரவு ஆடைகள் விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைக்கப்படும். இது தான் நடக்கப்போகிறது. அரசாங்கம் மீண்டும் இந்த நாட்டில் பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது.அரசாங்கத்திற்கு இதில் மாற்று வழியில்லாத போது, ​​சீனியைத் தேடுவது போல் அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள துணிக்கடைகளைத் தேட வேண்டியிருக்கும். உள்ளாடை பதுக்கல்,விளையாட்டுப் பொருட்கள் பதுக்கல் காரணமாக பொருட்களின் விலை உயரும். பின்னர் பதுக்கலைக் கண்டு பிடிக்கும் படலம் தொடங்கி இவர் தான் உள்ளாடை பதுக்கியவர்,இவர் தான் விளையாட்டுப் பொருட்களைப் பதுக்கியவர் என்றவாறு இராணுவம் டி -56 ஐப் பயன்படுத்தி கண்டுபிடித்துக் கொண்டு வருவார்கள்.

நாம் இன்று இந்த நாட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான இடத்திற்கு வந்துள்ளோம். ஒன்றரை வருடங்களாக இந்த அரசாங்கம் இந்த நாட்டிற்கு கொண்டு வந்துள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது, ​​மிகவும் வருத்தமாக இருக்கிறது.இங்கு நாம் கேட்க வேண்டியது இந்த நாட்டின் எதிர்காலம் குறித்தும் எதிர்கால சந்ததியினர் குறித்துமே, எதிர்கால சந்ததியினருக்கான ஒரு இருன்ட யுகம் பற்றிய முன்னறிவிப்பைத் தான் காண்கிறோம். நாம் 1970 மற்றும் 1977 களின் வரிசை யுகத்திற்கு திரும்ப வேண்டியுள்ளது. 

அந்த நேரத்தில் எங்களுக்கு மிளகாய் இல்லாமல் குழம்பும், அரிசி இல்லாமல் சேரும் சாப்பிடச் சொன்னார்கள்.அம்மையார் சொன்னால் செய்வதாக கூறினர்.இன்றும் அதே நிலை தான் ஏற்ப்பட்டுள்ளது.சேர் கூறினால்  நாங்கள் வைக்கோலைக் கூட சாப்பிடுவோம் என்று தான் அரசாங்கம் சொல்ல வேண்டியுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. இன்று, நாட்டை அறிவூட்ட வியத்மக என வந்தவர்கள் இன்று அறிவிலிகளாக மாறியுள்ளனர்.நாட்டுக்கு ஒளியைக் கொடுக்க வந்தவர்கள் முழு நாட்டையும் இருளில் கொண்டு செல்லும் சகாப்தமாக மாறிவிட்டனர்.சுபிட்சத்தைக் கொண்டுவர வந்த அரசாங்கம் இன்று இந்த நாட்டிற்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தில் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். இந்த அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லை.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்ன பொருளாதார வளர்ச்சி செய்யப்பட்டது? இன்று இந்த நாடு அழிவின் விளிம்பில் உள்ளது. உலகில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை இழந்துவிட்டது.  முன்னோக்கி வந்த முன்னேறிய ஒரு நாடாக நகர்ந்து கொண்டிருந்தது.இன்று, இந்த தவறான முடிவுகளால், மீண்டும் பின்னோக்கி செல்லும் சகாப்தம் வந்துவிட்டது, மீண்டும் நாடு பின்னோக்கி செல்லும் நாடாக மாறியுள்ளது.

2 கருத்துரைகள்:

2009 யில் அப்பாவி தமிழரகள் பலரை கொன்ற இலங்கை அரசுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனையே இந்த பொருளாதார அழிவு.

@AJan 30 வருடங்களாக கொழும்பில் பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொலை செய்த பிரபாகரானுக்கான தண்டனை தான் 2009ல் கிடைத்தது. அதில் அப்பாவி தமிழர்கள் உயிரிலக்கவும் அவனே காரணம்

Post a Comment