Header Ads



பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை


-
Ismathul Rahuman - 

பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.      முழு உலகிற்கும் பெறும் சவாலாக மாறியுள்ள கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த சகல நாடுகளும் முதன்மைப்படுத்தியுள்ள நிலையில் நாமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சாதாரண நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கிராமிய வீதிகள் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

 எமது நாட்டிலும் கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவாலுக்கு முகம் கொடுத்து அதனை முகாமைத்துவம் செய்து மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி நாட்டின் அத்தியாவசிய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச் செல்லவும் பொருளாதார, சமூக, கலாச்சாரம் போன்ற துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவிதத்தில் எமது அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

     விஷேடமாக எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறப்பதற்கான இயலுமையை தொடர்பாக தேடிப்பார்கிறோம். பிள்ளைகளினதும், ஆசிரியர்களினதும் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கல்வி மற்றும் சுகாதார துறையின் விஷேட நிபுணரகள் ஆராய்ந்து வருகின்றனர்.

    இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை  மீண்டும் ஆரம்பிக்க முடியுமென நாம் எதிர்பார்கிறோம்.

    எதிர்கட்சியினர் கோவிடை தமது அரசியலுக்காக பயன்படுத்த முனைகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளிலும்,செயல்களினாலும் அது ஒப்புவிக்கப்படுகின்றன. எதிர்கட்சியினருக்கு ஆரம்பம் முதலே தேவையாகவிருந்தது  கொவிட்  நாடு முழுவதும் பரவி மக்களின் அன்றாட கடமைகள் பாதிக்கப்பட்டு, நாடு சீரழிவதைக் காண்பதாகும். அப்படிப்பட்ட எதிர்கட்சியின் செயலை மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றார்.


1 comment:

  1. இந்த நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய அவலம் பொருத்தமில்லாதவன் அவனுக்கு தொடர்பில்லாத விடயத்தை பேசுவது, கல்வி அமை்ச்சு மௌனமாக இருக்கும் போது கட்டமைப்பு மந்தி(ரி) கல்வி, பாடசாலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றார். இது நாட்டுக்கே அவமானம்.

    ReplyDelete

Powered by Blogger.