Header Ads



முதலாம் திகதி நாடு திறக்கப்படுமா..? இரவு நேரங்களில் ஊடரங்கு பிறப்பிக்கப்படுமா..??


ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாட்டை முடக்கத்திலிருந்து விடுவித்து, இரவு நேரங்கங்களில் ஊரடங்க உத்தரவைப் பிறப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவ்வாறு திறக்கப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பின்பற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.