Header Ads



கர்ப்பமாக வேண்டாமென்பது சுகாதார அமைச்சின் நிலைப்பாடல்ல - கர்ப்பத்தை தாமதப்படுத்த யாரையும் கட்டாயப்படுத்தவும் முடியாது


நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வானது வேகமாகப் பரவி வருவதால், பெண்கள் கர்ப்பம்தரிப்பதை குறைந்தது ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில், இது சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், ஊடக சந்திப்பில் உரையாற்றும் மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சின் அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ஆனால் நிலவும் சூழ்நிலை குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக தங்கள் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.

தற்போது டெல்டா கொரோனா வைரஸானது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், இந்த நேரத்தில் இது நியாயமான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், கர்ப்பத்தை தாமதப்படுத்த யாரையும் கட்டாயப்படுத்துவது அல்ல, ஆனால் கர்ப்பிணிப் பெண்களை மோசமாக பாதிக்கும் தொற்றுநோயின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

கொவிட் -19 பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்பதால், மருத்துவ நிபுணர் தெரிவித்த அறிக்கை அதிக எச்சரிக்கையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.