Header Ads



அரசின் சுற்றறிக்கையினை மீறி, கர்ப்பிணி தாய்மார்கள் பணிக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு


தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் அரசினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினை மீறி சுகாதார பணியாளர்களான கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட அரச பணியாளர்கள் பணிக்கு அழைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, அரச தாதியர்கள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூலமான முறைப்படொன்றை பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட சுகாதார பணியாளர்கள் வேலைக்கு அழைக்கப்படும் நிலையில், அவர்களுக்கு எதேனும் ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பினை சுற்றறிக்கையினை மீறி செயற்படும் அதிகாரிகள் ஏற்க வேண்டுமென அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சில வைத்தியசாலைகளின் பிரதானிகள் குறித்த விடுமுறைக்கான அனுமதியினை வழங்கவில்லை என தமது சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். TW

No comments

Powered by Blogger.