Header Ads



SLBC தமிழ், முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமைபோல ஒலிபரப்பாகுமென அறிவிப்பு


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில் கடந்த 70 வருடங்களாக ஒலிபரப்பாகி வந்த தமிழ் நிகழ்ச்சிகளும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளும் வழமைபோல எப் எம் 102.1, எப் எம் 102.3 அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என்பதை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஷன் சமரசிங்க, மற்றும் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் தெரிவித்தனர்.

அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஷன் சமரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே மற்றும் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபையின் தலைவர் சலாஹுதீன் மற்றும் கூட்டுத்தாபன தமிழ் ,முஸ்லிம் சேவையின் ஊழியர்களோடு நேற்று (17) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, வழமையான தமிழ் சேவை ,முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் எந்த தடங்கலும் இல்லாமல் எப் எம் 102.1 ,எப் எம் 102.3 ஆகிய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகுமென்பதை உறுதிப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.