Header Ads



உங்களுக்கு இந்நாட்டை ஆட்சிசெய்ய, முடியாவிட்டால், எங்களுக்கு தாருங்கள் - சஜித்


நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து கொடுப்போம் என கூறிய இந்த அரசாங்கத்தின் பிரபலங்கள், பெரிய மனிதர்கள், இன்று முழு பொய்காரர்கள் ஆகியுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இன்று கடைகளில், சதொச நிலையங்களில், பொருட்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. அந்த பொருட்களுக்காக மக்கள் வரிசைக்களில் நிற்கின்றார்கள். பொருட்களை வாங்க சென்றவுடன் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

எங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது? அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விரைவாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுங்கள்.

அவர்களிடம் நாட்டின் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி கேளுங்கள். எதிர்க்கட்சியினர் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

இந்த நாட்டை கட்டியெழுபுங்கள். இந்த நாடு உடைந்து விழுவதை பார்த்துக்கொண்டு அதற்கு இடம் கொடுத்துகொண்டு, அரச பலத்தை பெற்றுக்கொள்ள எமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

அபிவிருத்தியடைந்த, சௌபாக்கியமான ஒரு நாடு, நாடு அபிவிருத்தி அடையும் ஒரு யுகம், மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும் ஒரு யுகம் தான் எமக்கும் தேவை.

அதனால் தான் நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, அனைவருடைய ஒத்துழைப்புடனும் மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம்.

நான் இந்த அரசாங்கத்திடம் தெளிவாக ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். உங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியா விட்டால், நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க முடியவிட்டால், உங்களுடைய பிழையான தீர்மானங்களால் உருவான பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், அந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு தாருங்கள் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப எங்களுக்கு முடியும். மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த எங்களால் முடியும். மக்களை வாழ வைக்க எங்களுக்கு முடியும் என குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.