August 06, 2021

பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருகிறேன் - காத்தான்குடியில் அருட்­தந்­தை ரொஹான்


1990 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்­துக்­காக தான் மன்­னிப்புக் கோரு­வ­தாக மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­லையின் 31 ஆவது வருட நினைவு தின நிகழ்வு, துப்­பாக்­கிச்­சூடு இடம்­பெற்ற மஸ்­ஜிதுல் ஹுசை­னிய்­யாவில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்தப் பள்­ளி­வாயல் படு­கொ­லை­யா­னது தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஒரு அமைப்பால் நடாத்­தப்­பட்­டது என்­ப­தற்­காக நாம் உங்­க­ளி­டத்தில் மன்­னிப்புக் கோரு­கின்றோம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு சென்ட் ஜோன்ஸ் அமெ­ரிக்க மிஷன் தேவா­ல­யத்தின் அருட்­தந்தை ரொஹான் உரை­யாற்­று­கையில்,

பல வன்­மு­றை­க­ளையும், படு­கொ­லை­க­ளையும் வேத­னை­க­ளையும், அனு­ப­வித்த சமூகம் நாங்கள். அதன் வேதனை எங்­க­ளுக்கு தெரியும். அந்த வகையில் இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லையும் இதில் உயிர் நீத்­த­வர்­களின் குடும்ப உற­வு­க­ளுக்கு எவ்­வாறு வேத­னை­களை, இழப்பைக் பாதிப்பை கொடுத்­தி­ருக்கும் என்­ப­தையும் அவர்­க­ளது பிள்­ளைகள் எவ்­வ­ளவு பாதிக்­கப்­பட்­டி­ருப்­பார்கள் என்­ப­தையும் நாம் அறிவோம். ஆகவே இதனை எந்த விதத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.வன்­மு­றைக்கு வன்­முறை ஒரு போதும் தீர்­வாக அமை­யாது. இனி­மேலும் இவ்­வா­றான நிகழ்­வுகள் ஒரு போதும் நடை­பெறக் கூடாது.

எனவே இந்த நாளில் இதன் வேத­னையை உணர்ந்­த­வர்­க­ளாக உற­வு­களை இழந்து துய­ரப்­ப­டு­கின்ற இன்­றைய நாளில் உங்­க­ளி­டத்தில் மன்­னிப்பை கேட்­ப­தோடு இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெ­றா­ம­லி­ருக்க நாங்கள் ஒன்று சேர்ந்து எங்­களால் இயன்ற முயற்­சி­களை செய்து கொண்டே இருப்போம். சமா­தா­னத்­துக்­காக, அனைத்து மக்­க­ளு­டைய நல்­வாழ்­வுக்­காக, நமது இளம் சந்­த­திகள் சந்­தோ­ச­மாக இந்த உல­கத்தில் வாழ்­வதற்­காக எம்மால் இயன்ற முயற்­சி­களை செய்வோம் என்றும் தெரி­வித்தார்.

இங்கு பிஸ்மி சமா­தான கற்­கைகள் நிறு­வ­னத்­தி­னதும் பிஸ்மி நிறு­வ­னத்­தி­னதும் முகா­மைத்­துவ பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி இங்கு உரை­யாற்­று­கையில்,

வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பொறிக்­கப்­பட வேண்­டிய ஒரு உரையை அருட்­தந்தை ரொஹான் இங்கு ஆற்­றினார். இந்த சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னால் ஆயிரம் கண்ணீர் கதைகள் இருக்­கின்­றன. இந்த சபையைப் பார்க்­கின்ற போதும் கூட அன்று காயப்­பட்டு உயி­ருக்குப் போராடி தப்பி பிழைத்த பல சகோ­த­ரர்கள் இருக்­கின்­றார்கள். இப்­ப­டி­யான துக்­க­க­ர­மான நிகழ்வு இலங்கை வர­லாற்றில் எடுத்து பார்க்­கின்ற போது எல்லா சம­யங்­க­ளுக்கும் நடந்­தி­ருக்­கி­றது.

நாம் காத்­தான்­குடி பள்­ளி­வாயல் படு­கொலை பற்றி பேசு­கின்ற போது, ஏறாவூர் படு­கொலை பற்றி பேசு­கின்ற போது பௌத்த மக்கள், அரந்­த­லாவ படு­கொலை பற்றிப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். பௌத்த சமயத் தலை­வர்கள், சிறு­வர்கள் என பலரும் இதில் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இதை எல்லாம் விட தமிழ் மக்கள்,கிறிஸ்­தவ மக்­களின் தங்­க­ளது தேவா­ல­யங்கள் மீது விமா­னங்­களின் மூலம் வீசப்­பட்ட குண்­டு­க­ளினால் கொல்­லப்­பட்ட தமது உற­வு­களைப் பற்றிப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். முள்­ளி­வாய்க்கால் இடத்­திலே தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஏன் கொல்­லப்­பட்­டார்கள் என்று தெரி­யாமல் பச்­சிளம் பால­கர்கள் பெரி­ய­வர்கள் இதில் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இறு­தி­யாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்­டுத்­தக்­கு­தலில் நமது மாவட்­டத்­தி­லி­ருக்­கின்ற சீயோன் தேவா­ல­யத்தில் வணக்க வழி­பாட்­டுக்குச் சென்ற 30க்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் நாங்கள் ஏன் கொல்­லப்­பட்டோம் என்று தெரி­யா­மலே உயி­ரி­ழந்­துள்­ளார்கள்.

இப்­படி தேசத்தின் வர­லாற்றைப் புரட்டிப் பார்க்­கின்­ற­போது காயமும் கண்­ணீரும் கம்­ப­லையும் கவ­லை­க­ளு­மா­கவே இருக்­கின்­றன. எனவே தான் இவ்­வா­றான நிகழ்­வுகள் இம் மண்­ணிலே தொடர்ந்து நிகழ வேண்­டுமா அல்­லது இவை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து எதிர்­கால பரம்­ப­ரைக்கு நாம் வாழு­கின்ற இந்த தாய்­நாட்டை அமை­தி­மிக்க சுபீட்சம் மிக்க தேச­மாக கைய­ளித்து விட்டுச் செல்ல வேண்­டுமா என்ற கேள்­வியை நாம் எல்­லோரும் நமக்­குள்ளே எழுப்பி விடை காண வேண்டும்.

அதனால் தான் அருட்­தந்தை என்னை தொலை­பே­சியில் அழைத்து, ஆகஸ்ட் 3 ஆம் திகதி சுஹ­தாக்கள் தின நிகழ்வில் பங்­கேற்று நான் காத்­தான்­குடி மக்­க­ளோடு பேச வேண்டும் ;எனக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தித் தாருங்கள் என்று கேட்டார். அந்த வகை­யில்தான் பள்­ளி­வாயல் நிரு­வா­கி­க­ளோடு பேசிய வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

நான் பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமூ­கத்­திடம் இந்த சம்­ப­வத்­திற்­காக மன்­னிப்புக் கோர வேண்டும் என்று கூறி, இந்த இடத்­தி­லேயே பகி­ரங்­க­மாக மன்­னிப்பும் கேட்டார். உண்­மையைக் கண்­ட­றி­வது, மன்­னிப்புக் கோரு­வது, மன்­னிப்­ப­ளிப்­பது என்­பன இஸ்­லாத்தில் வலி­யு­றுத்­தப்­பட்ட விட­யங்கள். நபி­ய­வர்­களை கொலை செய்ய வந்­த­வர்­களை மன்­னித்த வர­லாற்றைக் கொண்ட சொந்­தக்­கா­ரர்கள் நாம்.

எனவே விரும்­பியோ விரும்­பா­மலோ நடந்த இந்த சம்­ப­வங்­களில் இருந்து மீண்­டெ­ழுந்து இவ்­வா­றான காயப்­ப­டுத்தும் சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­றா­த­வாறு பாது­காப்­பது நமது பொறுப்­பாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

Vidivelli, எம்.எஸ்.எம்.நூர்தீன்

3 கருத்துரைகள்:

இரத்த வெறி நாய்களின் கொலை அடையாளங்களை அழித்து விட இடம் கொடுக்காதீர்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளினால் ஈவு இரக்கமின்றி கிறீஸ்தவ தேவாலயங்களில் கொன்றழித்த இழி செயலை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க கூடாது

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஈவு இரக்கமின்றி கிறீஸ்தவ தேவாலயங்களில் கொன்றழித்த இழி செயலை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க கூடாது

Post a Comment