Header Ads



கொரோனாவிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க, சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது - பொதுஜன பெரமுன


தற்போதைய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் அனைத்து இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் சகல சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்கள் அல்லது அடுத்த மாதம் முக்கியமானவை என சுகாதார தரப்பினர்  கூறினாலும், நாடு ஓர் உலகளாவிய தொற்றுநோயைச் சமாளிப்பதால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் தீர்க்கமானதாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று -17- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நாடு பல சந்தர்ப்பங்களில் முடக்கல் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால் நாடு மீண்டும் திறக்கப்படும் போது கொரோனா வைரஸ் தொற்று வீதம் அவ்வப்போது அதிகரித்தது.

உலகம் குறைந்தது இரண்டு வருடங்களாவது கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் இப்போது அறிவித் துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதே நெருக்கடிக்கு சிறந்த தீர்வு என்பதில் ஒருமித்த கருத்து இருக்கினறது.

தற்போதைய அரசாங்கமானது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான அனைத்து இலங்கையர்களுக்கும் பெற்றுக் கொடுக்க சாத்தியமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.