Header Ads



றிசாத்திற்கு நீதி மறுப்பு - நீதியரசர்கள் விலகுவது குறித்து ஹக்கீம், கிரியல்ல சுட்டிக்காட்டு - கரிசனை கொள்வதாக அலி சப்ரி பதிலளிப்பு


”73 நாட்களாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின், அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சமயங்களின் போதெல்லாம், அந்த மனு  விசாரணை நடைபெறவுள்ள தினத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் எவராவது ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக, தான் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக, குறிப்பிட்ட வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் தருணங்களில் உச்ச நீதிமன்றத்தில்  அறிவிக்கின்றார். 

இது வரிசைக்கிரமமாக  இதுவரை நான்கு தடவைகள் இடம்பெற்றுள்ளது.  இதன் காரணமாக சிரேஷ்ட அரசியல்வாதியான ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நீதியும் மறுக்கப்படுகின்றது.  எனவே, பிரதம நீதியரசர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”  என்று  முன்னாள் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

ரவூப் ஹக்கீம் எம்.பி யின் இந்த கோரிக்கையை நியாயப்படுத்தி, எதிர்க்கட்சியின் பிரதம  கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷமன் கிரியல்லவும் சபையில் பேசினார். 

இந்த விடயத்தை தான் உரிய இடத்திற்கு பாரப்படுத்துவதாகவும், இதில் கரிசனை கொள்வதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி சபையில் அறிவித்தார்.

1 comment:

  1. Even a little child knows "Justice Delayed, Justice Denied? "

    ReplyDelete

Powered by Blogger.