Header Ads



பாபரி மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக இஸ்லாத்தை ஏற்று பள்ளிவாசல்களை கட்டியவர் வபாத்


#இன்னாலில்லாஹி_வ_இன்னா_இலைஹி #ராஜிஹூன்

பாபரி மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக ஈமானை ஏற்று, பல்வேறு புதிய மஸ்ஜிதுகளை கட்டியதோடு,பல மஸ்ஜிதுகளை புணர் நிர்மாணமும்  செய்த முஹம்மது ஆமிர் (பல்பீர் சிங்) அவர்கள்   22.07.21 நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.

பாபர் மஸ்ஜிதின் நடு கோபுரத்தை இடித்தவர்களில் ஒருவரான முஹம்மது ஆமிர் (பல்பீர் சிங்) அவர்கள் சென்னை வந்திருந்தபோது பேசியது..

அல்லாஹ்வின் பள்ளியை இடித்த சங்பரிவார்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ, அதில் சிலபங்கு முஸ்லிம்களுக்கும் உண்டு.

ஏனெனில் இது அல்லாஹ்வின் பள்ளி. அவன்தான் நம்மை படைத்தான். அவனை வணங்கி, அவன் கட்டளைப்படி வாழ்வதே நம் வாழ்வின் நோக்கம்.. என்பதையெல்லாம் நீங்கள் எங்களுக்கு கூறவில்லை.

எனவே இடித்தவனுக்கு அதில் எவ்வளவு பங்குள்ளதோ, அதேபோல் சத்தியத்தை மறைத்த உங்களுக்கும் அதில் சிலபங்கு உள்ளது.

மேலும் அவரது உரையில் அங்கு வந்திருந்த முஸ்லிம்களை பார்த்து சில கேள்விகளை கேட்டார்...

# நான் இஸ்லாத்தை ஏற்ற 23 ஆண்டுகளில் என்னுடைய சட்டை 'ஜுப்பா'வாக மாறிவிட்டது.

  ஆனால் உங்களில் பலர் ஸஜ்தா செய்தால், இடுப்பு தெரியும் அளவிற்கு குட்டையான ஆடைகளையே அணிந்துள்ளீர்களே! ஏன்..?

# நான் இஸ்லாத்தை ஏற்ற 23 வருடத்தில் என்னிடம் நீண்ட தாடி வந்துள்ளது.

  உங்களில் பலரின் முகத்தில் தாடியே இல்லையே! ஏன்..?

பதில் கூறமுடியாமல் அங்கு வந்திருந்த பலரின் தலை கீழே குனிந்தது.

மேலும் முஹம்மது ஆமிர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற இந்த சில ஆண்டுகளில், அழைப்பு பணியை தனது அன்றாட பணியாக ஆக்கிக் கொண்டார்.

2016 வரை 5600க்கும் அதிகமானோர் அவர் மூலம் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

2 comments:

Powered by Blogger.