Header Ads



கொச்சிக்கடை நகர போக்குவரத்து நெரிசலை நேரில் அவதானித்த ஜனாதிபதி - 4 வழி பாதை அமைக்க தீர்மானம் - நிமல் லான்ஸா கண்காணிப்பு


- Ismathul Rahuman -

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு இனங்க நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நான்கு வழிப் பாதை அமைத்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் கண்காணிப்பு விஜயமொன்றை இன்று -12- மேற்கொண்டார்.

இங்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா,

 அண்மையில் ஜனாதிபதி இப்பிரதேசத்தின் ஊடாக பயணித்த போது கொச்சிக்கடை நகரில் போக்குவரத்து நெறிசலை அவதானித்துள்ளார். போக்குவரத்து நெறிசலை தனிக்க வீதியை அபிவிருத்தி செய்யுமாறு பணித்தார். அதற்கமைய இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டோம். நான்கு வழி போக்குவரத்து பாதை அமைத்து அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளோம்.

3.5 கிலோமீட்டர் நீளமுள்ள கொச்சிக்கடை நகரில் முதல் கட்டமாக நெருக்கடியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக அபிவிருத்தி செய்யப்படும்.

கொச்சிக்கடை நகரில் 200 கிலோமீட்டருக்குள் 8 வீதிகள் பிரதான வீதியுடன் சங்கமிக்கின்றன. இதனால் வாகண நெறிசல் ஏற்படுகின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சீதுவ, தண்டுகம பாலத்திலிருந்து புத்தளம் வரை வீதி அபிவிருத்தி செய்யப்பவுள்ளன என்றார்.

2 comments:

  1. வீதிகள் அபிவிருத்திக்கான கோடான கோடி பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி அள்ளிவழங்க காத்து நிற்கின்றது. கேட்பவர்கள் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.