Header Ads



வீதியொன்றில் எரிபொருள் லொறியில் கசிவு ஏற்பட்டால், அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறமுடியுமா..? அமைச்சர் ரோஹித


எக் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தானது எதிர்பாராத துரதிஸ்டமான

சம்பவம் என தெரிவித்த துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன,

எனினும் சிற்சில சந்தர்ப்பங்களில் இதற்கு அரசியல் சாயமூட்டும்

நடவடிக்கையில் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர்

சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவித்த அவர்,குறித்த கப்பலானது டுபாய் துறைமுகத்தில் பயணத்தை ஆரம்பித்து  கட்டார்,

குஜராத்தின் 3 துறைமுகங்களிலும் உள்நுழைந்த பின்னரே இறுதியில் எமது

துறைமுகத்தக்கு வந்துள்ளது. எனவே, ஏனைய நாட்டில் நிராகரித்த

இக்கப்பலை நாம் அனுமதித்தோம் என முன்வைக்கும்  குற்றச்சாட்டை

நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

இதனுடன் தொடர்புடைய சிலர் தமது சொந்த அபிப்ராயங்களை ஊடகங்களில்

முன்வைக்கின்றனர். நாட்டில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அது எடுக்க

வேண்டிய நடவடிக்கை குறித்தே தகவல்களை முன்வைக்க வேண்டும்.

ஆனால், அரசியல் ரீதியாக கருத்தை முன்வைப்பதானது கீழ்த்தரமான

செயற்பாடாகவே நாம் கருதுகிறோம்.

“இந்தக் கப்பல் விடயத்தில் தேவையற்ற கருத்துகளை முன்வைத்தவர்கள்

தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றப்பலனாய்வு பிரிவில்

முறைப்பாடு செய்துள்ளது” என்றார்.


இச்சம்பவம், இடம்பெற்ற தினத்திலிருந்து இன்ற வரை எமது பொறுப்பை

நாம் கைவிடவில்லை. இந்த சீரற்ற காலநிலை நிலவும் நேரத்தலும் எமது

அதிகாரிளுடன் இணைந்து ஏதாவது ஆபத்து இடம்பெற்றால் அதனை

தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றோம்.

ஆனால் இந்தக் கப்பலை நாம் கொண்டு வந்து பந்தமொன்றால்

பற்றவைத்ததைப் போன்றே சிலர் கதைக்கின்றனர் என்றார்.

கொழும்பு துறைமுகமானது கடல் கேந்திர நிலையமாக இயங்கி வருவதால்,

2019இல்  4,191 கப்பல்களும், 2020 இலும் 3,806 கப்பல்களும் 2021இல் இன்றுரை

1,521 கப்பல்கள் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் துறைமுகம் என்றார்.

இந்த நாட்டின் பிரதான வீதியொன்றில் எரிபொருளுடன் செல்லும் பாரவூர்த்தி

விபத்துக்குள்ளாகி அங்கு எரிபொருள் கசிவு ஏற்படலாம்.அதற்கு அரசாங்கம்

பொறுப்பு கூறமுடியுமா? ஏன் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜனாதிபதியோ

அரசாங்கமோ பொறுப்பிலிருந்து ஓரமாகி இருக்கும் அரசாங்கம் இல்லை.நாம்

எமது  பொறுப்பை நிறைவேற்ற தயாராகவுள்ளோம் என்றார்.

2 comments:

  1. QATAR NAATTIL, INDIA NAATTIL KAPPALIL
    KASHIVU KAARANAMAAKA ANUMATHIKKAATHA KAPPALUKKU , ANUMATHI KODUTHUVITTU, MAKKALAI MUTTAALKALKALAAKKA NINAKUM
    IVANUKKU, SHARIYAANA NADVADIKKAI
    EDUKKAVENDUM.

    ReplyDelete
  2. இந்த மந்தி(ரி)களின் பதில் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் கேவலம்.

    ReplyDelete

Powered by Blogger.