Header Ads



இம்ரான்கானின் வாக்குறுதி நிறைவேற்றம் - 72 மில்லியன் ரூபாய்கள் கையளிப்பு - பாகிஸ்தான் அரசுக்கு ஜனாதிபதி கோட்டபய நன்றி தெரிவிப்பு


பாகிஸ்தான் அரசின் சார்பாக, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டக் அவர்கள் தலா 66 மில்லியன் மற்றும்  8.027 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை  ஜூன் 19, 2021 அன்று கொழும்பு கங்காரமய விகாரையில்  2 நடைபெற்ற விழாவின் போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்விடம் கையளித்தார். இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் கெளரவ இம்ரான் கான் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது,  இலங்கை விளையாட்துத்துறையை  மேம்படுத்துவதற்காக 66 மில்லியன் ரூபா நன்கொடை  வழங்குவதாக அறிவித்தமைக்கமைய இந்நன்கொடை வழங்கப்பட்டதோடு, கொவிட் -19 க்கான நிவாரண உதவியாக  8.027 மில்லியன் ரூபா இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கும் போது, இருநாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான  ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு பாகிஸ்தான் அரசாங்கமும் பாகிஸ்தான் மக்களும் தேவைப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை  அரசாங்கத்துக்கும்  இலங்கை மக்களுக்கும்  உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும்,  இலங்கை மாணவர்களுக்கான  100 மருத்துவத்துறை புலமைப்பரிசில்கள்  உட்பட அனைத்து பிரிவுகளிலும் இலங்கை மாணவர்களுக்கான  250 முழு நிதியுதவி பெற்ற  அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள்  குறித்தும் உயர் ஸ்தானிகர் ஜனாதிபத்திற்கு விளக்கப்படுத்தியதோடு தகுதியான இலங்கை மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  நன்றி தெரிவித்தார்

இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய மற்றும்   விருந்தினராக கலந்து கொண்ட கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமய  விகாரை தலைமை பிக்கு  கலாநிதி கிரிந்தே அசாஜி நாயக்க தீரோவுக்கு உயர் ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இவ்விழாவில் கலாநிதி அசெலா விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




2 comments:

  1. Muslimgal yaarum kalandukollavillaya

    ReplyDelete
  2. பிச்சை எடுத்துக் கொள்வதற்கு எமது அரசு எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றது. அமெரிக்க அரசு இலங்கை வழங்கும் உதவிகள்,மானியங்கள் எதுவும் பணமாக அரசிடம் ஒப்படைப்பதில்லை. அவ்வாறு ஒப்பதை்தால் அதற்கு கைகால் முளைத்து தானாகவே மறையும் ஆற்றல் மிக்கது பணம்.அந்த உண்மையை விளங்கி யூஎஸ் எய்ட் போன்ற நிறுவனத்துக்கு பணத்தை வழங்கி உரிய திட்டத்தை அந்த நிறுவனம் நேரடியாகத் தலையி்ட்டு ஒரு சதமும் வீணாக்காது அந்த பணத்தை அப்படியே அமெரிக்கா வாக்களித்த திட்டத்தை நிறைவேற்றுகிறது. அதேபோல் பாகிஸ்தானும் செய்திருக்க வேண்டும்.இவ்வாறு நேரடியாக வழங்கப்படும் பணம் உரிய திட்டத்துக்குச் செலவழிக்கப்பட்டு அந்த திட்டங்கள் வெற்றிகராக நிறைவு செய்யப்படும் என இந்த நாட்டில் யாருக்கும் உத்தரவாதமளிக்கமுடயாது. ஆகக் குறைந்தது ஜப்பான் அரசு இங்கு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றும் முறைகளையாது இந்த பாகிஸ்தான் பின்பற்றி இருக்கலாம். ஜப்பான் உரிய திட்டத்துக்கு டென்டர் விநியோகித்து அதில் ஆகக் குறைந்த தொகையில் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்த தனியார் நிறுவனத்தின் சகல தொழில்நுட்ப மற்றும் தேவையான நிபந்தனைகளும் அதன் செயல்திறனும் உறுதிப்படுத்தப்பட்டபின்னர் டென்டர் வழங்கப்பட்டு அதை ஜப்பான தூதரகம் நேரடியாகக் கண்காணித்து அதனை வெற்றிகரமான முடித்தபின்னர் தான் பணத்தை வழங்குவார்கள். இது போன்ற ஏற்பாடுகளிலும் பணம் வேறுவழிகளில் மோசடிக்கு இலக்காக மாட்டாது. மேல் உள்ள படத்தைப் பார்க்கும் போது எமக்கு ஏற்படும் ஆதங்கத்தை இங்கு எழுத்தில் வடிக்க முடியாது.ஆனால் கவலை மட்டும்தான் வருகிறது. நாம் ஹஸ்புனல்லாஹ் வநிமல் வகீல் எனக்கூறி எம்மையே நாம் ஆறுதல் படுத்திக் கொள்வோம்

    ReplyDelete

Powered by Blogger.