June 19, 2021

இரகசிய வாக்கு மூலம் வழங்கவுள்ள 2 மௌலவி ஆசிரியர்கள் - சுமந்­தி­ரனின் எழுத்துமூல சமர்ப்­ப­ணமும் முன்வைப்பு


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்­த ­ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் குறித்­தான விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட இரு மெள­லவி ஆசி­ரி­யர்கள் எதிர்­வரும் ஜூலை முதலாம் திகதி நீதி­வா­னுக்கு இர­க­சிய வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­க­வுள்­ளனர். குற்­ற­வியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த வாக்கு மூலத்தை வழங்க, அவ்­விளம் ஆசி­ரி­யர்கள் இருவர் சார்­பிலும் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் கோரிக்­கை­யினை முன்­வைத்து அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்­டுள்ள நிலை­யி­லேயே எதிர்­வரும் ஜூலை முதலாம் திகதி அவ்­வாக்கு மூலங்கள் பெற நிர்­ண­யிக்­கப்பட்­டுள்­ளது.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட, புத்­தளம் கரை தீவு அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் ஆசி­ரி­யர்­க­ளாக செயற்­பட்­ட­தாக கூறப்­படும் 26,27 வய­து­களை உடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசு­ருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகியோர் சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விசா­ர­ணை­களின் பின்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­மறி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர்.

அவ்­வி­ரு­வரும், ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சி­ய­ளிக்க சி.ஐ.டி.யினரால் வற்­பு­றுத்­தப்பட்­டுள்­ள­தாக அவர்கள் சார்பில் உயர் நீதி­மன்றில் இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளன.

கடந்த 7ஆம் திகதி அம்­ம­னுக்கள் பரி­சீ­ல­னைக்கு வந்த போது, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் குறித்த இரு மெள­லவி ஆசி­ரி­யர்கள் சார்­பிலும் விஷேட விட­யங்­களை முன் வைத்­தி­ருந்தார்.

அதன்­படி அவ்­வி­ரு­வரும் கடந்த 15 ஆம் திகதி கோட்டை நீதிவான் முன்­னி­லையில் இர­க­சிய வாக்கு மூலம் வழங்க ஏற்­க­னவே ஏற்­பாடு செய்­யப்பட்­டி­ருந்த நிலையில், அவ்­வி­ரு­வரும் அறிய முடி­யாத இரு இடங்­களில் தடுத்து வைக்­கப்பட்­டுள்­ள­தாக உயர் நீதி­மன்­றுக்கு ஜன­ா­திபதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந் நிலையில் கடந்த 15 ஆம் திகதி கோட்டை நீதி­மன்றில் குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போதும் அன்­றைய தினம் கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே விடு­முறை என்­பதால், நேற்று 17ஆம் திக­தி­வரை அது ஒத்தி வைக்­கப்பட்­டது.

இந்நிலையில் நேற்று அம்­மனு விசா­ர­ணைக்கு வந்தபோது, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம், சந்­தேக நபரை வழக்கு விசா­ரணை முடியும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க வேண்டும் என கூறப்­பட்­டாலும், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் இந்த இரு சந்­தேக நபர்­க­ளையும் மன்றில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்­துள்­ளதால், சட்­டத்தின் பிர­காரம் அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் நியா­ய­மான சந்­தேகம் தொடர்பில் திருப்­தி­ய­டைய வேண்டும் என்ற விட­யத்தை வைத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், தனது சேவை பெறு­நர்­க­ளான குறித்த இரு மெள­ல­வி­மா­ருக்கும் எதி­ராக எந்த சான்­று­களும் இல்­லாத நிலையில் அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட முடி­யாது எனும் வாதத்தை எழுத்து மூலம் சமர்ப்­பித்தார்.

இந் நிலை­யி­லேயே, தற்­போது குறித்த இரு மெள­ல­வி­மாரும் கொழும்பு சிறைக்கு அழைத்து வரப்பட்­டுள்­ள­தாக நீதி­வா­னுக்கு அறி­விக்­கப்பட்­டுள்ள பின்­ன­ணியில் எதிர்­வரும் முதலாம் திகதி, ஏற்க­னவே வழங்­கப்பட்­டுள்ள உத்­தரவுக்கு அமைய இர­க­சிய வாக்கு மூலம் வழங்க அவர்­களை மன்றில் ஆஜர் செய்ய நீதிவான் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­தரவிட்டு வழக்கை அன்­றைய தினத்­துக்கு ஒத்தி வைத்­துள்ளார்.

முன்­ன­தாக புத்­தளம் – கரை தீவு அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் மாண­வர்­க­ளுக்கு ஆயு­தப்­ப­யிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் மத்ரஸா பாடசாலை ஆசிரியர்களான குறித்த இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார்.- Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment