May 15, 2021

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை நடவடிக்கைக்கு கோருகிறார், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம்


பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம், தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்று தனித்தனிப் பதிவுகளையிட்டுள்ளார்.அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்களைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதை நிறுத்துங்கள். 

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தூண்டப்படாமலேயே தங்குதடையின்றித் தொடர்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. சபையும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை திசைத்திருப்புவதற்காக ஹமாஸ் மீது பாரபட்சமான முறையில் பழி சுமத்துவதை ஐக்கிய இராச்சியத்திற்கான பலஸ்தீனத் தூதுவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். "நோயின் அறிகுறிகளைத் தேடுகின்றீர்களே தவிர, நோய் எங்கேயிருக்கின்றது என்பதைக் காண்கிறீர்கள் இல்லை" என அந்த இராஜதந்திரி சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஹக்கீம் பிரஸ்தாபித்துள்ளார்.

3 கருத்துரைகள்:

1948க்கு முன் இஸ்ரேல் என்ற நாடு எங்கே? பலஸ்தீனம் என்று ஒரு நாடுதான் உண்டு.இஸ்ரேல் முதலில் U.K ஆலும் பின்னர் USA ஆலும் வளர்க்கப்பட்ட பிள்ளை.இவ்வளவு காலமும் "73 வருடங்கள்" பூர்வீக குடிகளான பலஸ்தீனியர்களை அடக்கி,சமாதானம் என்ற தோரணையில் பேச்சுவார்த்தையால் இழுத்தடித்து தவிக்கவிட்டது அமெரிக்கா.வேறு நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா பலஸ்தீன மக்களுக்கு நடக்கும் அநியாயத்தை அனுமதித்து தன் நாட்டை பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்று வக்காலத்து வாங்குகிறது.அதுமட்டுமல்ல ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நூற்றுக்ககணக்கான தடை பிரேரணைகளை வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு தடுக்கிறது.வருடாந்தம் 3.8 பில்லியன் அமெரிக்க மக்களின் பணத்தை இனாமாக வழங்குகிறது.இப்படியானால் எவ்வாறு அங்கே அமைதி நிலவும். நியாஸ் இப்றாகிம்.

அமெரிக்க வில் karupinathavarkaluku solla John Biden இல்லையே?

மிக நல்ல கருத்து. நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இதைப் படித்து பாலஸ்தீன மக்களின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள் இஸ்ரேலுடன் இரகசிய பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளனர், ஆனால் பாலஸ்தீனியருக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாக பாசாங்கு செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலுக்குச் சென்று அங்கு வருகைகளை அனுபவித்துள்ளனர். மறைந்த அமைச்சர் M.H. முகமதுவும் தனது காலத்தில் இஸ்ரேலுக்கு ரகசியமாக விஜயம் செய்திருந்தார். முஸ்லீம் அரபு தலைவர்களும் பல முறை இதைச் செய்திருக்கிறார்கள். இன்றைய அரபு தலைவர்கள் இஸ்ரேலுடன் பெருவணிகம் செய்து தங்களுக்கு எதிராக போராட இராணுவ ஆயுதங்களை வாங்குகிறார்கள்.
பாலஸ்தீனத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் 1975 ஆம் ஆண்டில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) கொழும்பில் ஒரு தூதரகத்தைத் திறந்தபோது தொடங்கியது. 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீனிய சுதந்திரப் பிரகடனத்திற்குப் பிறகு, இலங்கை குடியரசு மற்றும் மாலத்தீவு குடியரசு ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரித்த உலகின் முதல் நாடுகள்.1970 களில் சிரிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் பாலஸ்தீனிய ஆதரவுக்கு ஆதரவாக இஸ்ரேல் தூதரகத்தை மூடியது. இருப்பினும், ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை இஸ்ரேலுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்தியது. பாலஸ்தீனிய ஆதரவுக்கு ஆதரவாக ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகள் மீண்டும் நிறுத்தப்பட்டன. இருப்பினும் 2000 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான உறவுகள் மீண்டும் நிறுவப்பட்டன. இலங்கை தற்போது மோதலுக்கான இரு மாநில தீர்வை ஆதரிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இலங்கை 130 மில்லியன் ரூபாயை பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவியாக வழங்கியது. புலிகளுக்கு எதிரான போர் இலங்கையை இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் திறக்கச் செய்தது. பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு பாலஸ்தீன பிரச்சினையை மிகவும் பாலஸ்தீன பிரச்சினையை அவர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு மிகவும் மனிதாபிமான முறையில் அணுகுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் இலங்கை வலியுறுத்த வேண்டும், Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment