Header Ads



கொழும்பில் அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை


கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் களுபோவில வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் களுபோவில வைத்தியசாலை தாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.

இன்று (நேற்று) காலை 1990 சுவசெரிய சேவையில் பயணியாற்றும் ரவிந்து அம்பியுலன்ஸிற்கு வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வந்தார். குழந்தை குறித்து அவரிடம் வினவிய போது,

“மிஸ் நாங்கள் தற்போது இந்த குழந்தையை பிரசவித்தோம். பிரசவித்த குழந்தையே இது. குழந்தையின் தாய் உள்ளே உள்ளார். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தனக்கு பிரச வலி வந்துவிட்டதாக பெண் ஒருவர் கூறினார். உடனடியாக சென்று பார்க்கும் போது குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தார். அம்பிபுலன்ஸில் ஏறியதும் குழந்தை பிறந்துவிட்டது. நான் தான் குழந்தையை வெளியே எடுத்தேன் என ரவிந்து குறிப்பிட்டுள்ளார். கோவிட் வைரஸ் பரவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து சிந்திக்காமல் குழந்தை பிரசவித்த இந்த சேவையை நிச்சயமாக பாராட்ட வேண்டும். அத்துடன் இந்த காலப்பகுதியில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் பணியை பாராட்ட வேண்டியது கடமை” என தாதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.