Header Ads



தமிழ் மொழி உள்வாங்கப்படாமை, தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளேன் - அலி சப்ரி


சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி உள்வாங்கப்படாமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய இலத்திரனியல் நூலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது.

சீன அரசாங்கம் மற்றும் மக்களின் அனுசரணையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பெயர்ப்பலகையில் விபரங்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும், அதில் தமிழ் மொழியில் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் தான் சீனாவின் உரிய அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய பின்னர் தற்போது அந்த பெயர்ப்பலகை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மொழியையும் உள்வாங்கி புதிய பெயர் பலகையை பொருத்துவதாக அவர்கள் கூறியுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


3 comments:

  1. அப்படியானால் போர்ட் சிடியுடன் சட்டமாஅதிபர் திணைக்களத்தையும் சேர்த்து ஒன்றாகவே சீனா வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.இனி நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏன் பொதுமக்களும் சீனமொழியைக் கற்றால் தான் சட்ட நிறுவனங்களை அவர்களால் அணுகமுடியுமாகும் நிலை மிகவிரைவில் இலங்கையில் ஏற்பட இருக்கின்றது.

    ReplyDelete
  2. அப்படியானால் போர்ட் சிடியுடன் சட்டமாஅதிபர் திணைக்களத்தையும் சேர்த்து ஒன்றாகவே சீனா வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.இனி நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏன் பொதுமக்களும் சீனமொழியைக் கற்றால் தான் சட்ட நிறுவனங்களை அவர்களால் அணுகமுடியுமாகும் நிலை மிகவிரைவில் இலங்கையில் ஏற்பட இருக்கின்றது.

    ReplyDelete
  3. Shan shin shuwa Al Shabri

    ReplyDelete

Powered by Blogger.