Header Ads



திருக்குர்ஆன் ஓதி கிடைத்த பணத்தை, கொரோனா நிவாரணத்திற்கு நன்கொடையாக அளித்த முன்மாதிரி சிறுவன்


- காஜா மைதின் -

திருக்குர்ஆன் ஓதி கிடைத்த பணத்தை கோவிட் நிவாரணத்திற்கு நன்கொடையாக அளித்த முன்மாதிரி சிறுவன்.

வானிமேல் அஷ்ரஃப் இவர் வளைகுடா நாட்டில் வேலைப் பார்த்து வருகிறார் இவரது மகன் #அர்ஸல் (12)

ஒரு கத்தம் குர்ஆன் ஓதினால் ஆயிரம் ரூபாய் தருவதாக அர்ஸலிடம் தாயார் கூறினார்.

இதைக் கேட்ட சிறுவன் உற்சாகமாக ஓத ஆரம்பித்துவிட்டான்.

கத்தாரில் உள்ள அஷ்ரஃபிடம் மனைவி தகவல் சொன்ன போது அவரும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்.

சிறுவன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து வேகமாக ஓத ஆரம்பித்து எட்டு தினங்களில் முழு குர்ஆனையும் ஓதி முடித்து விட்டான்.

மகிழ்ச்சியுடன் தாயார் அவனுக்கு 2000₹ ரூபாய் பணத்தை வழங்கினார்.

தாயார் அவனுக்கு வழங்கிய 2000₹ ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருக்கு தெரியாமல் வளையம் காவல் நிலையத்திற்கு சென்று இந்த பணத்தை கொரோனா காலத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டுமென கூறி அவர்களிடம் ஒப்படைத்தான்.

சந்தேகமடைந்த போலீஸார் சிறுவனின் பெற்றோருக்கு அழைத்து தகவல் விசாரித்தனர்.

அது அவனுக்கு நான் கொடுத்த பணம்னு அவனது தாயார் போலீசாரிடம் கூறினார்.

அவனது விருப்பப்படி நீங்கள் அந்த பணத்தை கொரோனா நிதிக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

எவ்வளவு நல்ல மனம் படைத்த குழந்தைகள் வாழும் பூமி இது.

அல்லாஹ் அச்சிறுவனுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கி அருள்புரிவானாக...!❤️


No comments

Powered by Blogger.