Header Ads



ரமழான் நோன்பிருக்கும், மாற்றுமத சிறுவர் சிறுமியர்


இங்கே மேஜை நிறைய பழவகைகள், பலகாரங்கள், ஜுஸ் நிறைத்த கிளாஸ் முன்பு அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியர் அனைவரும் ஹிந்து சமூகத்தை சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள்.

கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இவர்கள் மாலை வேளையில் அருகில் உள்ள மசூதியில் ஒலிக்கும் மக்ரிப் பாங்கோசைக்காக காத்திருக்கிறார்கள்..

வீடுகளின் அருகில் உள்ள சகவயது முஸ்லிம் நட்புகள் ரமலான் மாதம் நோன்பு பிடிப்பதை பார்த்து தாங்களும் நோன்பிருக்க விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க, சகோதர சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை மதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்..

தங்களின் சிரமத்தை பாராமல் அதிகாலை ஷஹர் உணவும், மாலையில் இஃப்தார் உணவுகளும் விதவிதமாக தயாரித்து வழங்கவும் செய்கின்றனர்..

முதல் படத்தில் உள்ள சிறுவனின் தந்தை சினிமா நடிகர் நிர்மல், தனது மகன் ரமலான் நோன்பு பிடிக்கும் விபரத்தை வலைப்பதிவு செய்து பசியின் அருமையை அவன் உணரட்டும் என்று நோன்பு வைக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்..

இறுதி படத்தில் உள்ள சிறுமி கல்யாணி தொடர்ந்து 20 நாட்களாக நோன்பிருப்பதாக அவரது மாமா மகிழ்ச்சியுடன் வலைப்பதிவு செய்துள்ளார்.

மனித நல்லிணக்கம் பேணும் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்..

Colachel Azheem

1 comment:

  1. "மனித நல்லிணக்கம்" என்ற பொருள் எங்கே விற்கின்றது? அதனை எங்கே வாங்கலாம்? அதனை எப்படி உபயோகிப்பது? இதனை வாங்கும்போது விலைக் கழிவு ஏதும் தருவார்களா? இதனை வாங்கும்போது இதனுடன் வேறு ஏதாவது பொருளை இனாமாகத் தருவார்களா? இந்தப் பொருள் எனதளவில் கேரள மாநிலத்தில்த்தான் அமோக விற்பனையாகின்றது. தாமரைக்கு முட்டைதான் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    ReplyDelete

Powered by Blogger.