Header Ads



தவறான அரசியல் தீர்மானங்களினால் நாட்டை, பின்னோக்கி நகர்த்த நாம் இடமளிக்க மாட்டோம் - பிரதமர் மஹிந்த (வீடியோ)


நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) அலரி மாளிகையில் தெரிவித்தார்.

குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குடம் மூன்று திட்டங்களை ஸும் தொழில்நுட்பம் ஊடாக ஒரே நேரத்தில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ நீர் வழங்கல் திட்டம், காலி மாவட்டத்தில் ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியன கௌரவ பிரதமரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய 2025இல் அனைவருக்கும் நீர் என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்கும் வகையில் குருநாகல், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் 07 பிரதேச செயலக பிரிவுகளின் 377 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் நன்மையடை உள்ளனர்.

தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டத்திற்கு 1022 கோடி ரூபாயும், கலிகமுவ நீர் வழங்கல் திட்டத்திற்கு 230 கோடி ரூபாய் மற்றும் ஹபுகல நீர் வழங்கல் திட்டத்திற்கு 32 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கட்டுமானங்களுக்கு உள்ளூர் பொறியாளர்களினால் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் தலையீட்டால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளித்ததை தொடர்ந்து கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,


No comments

Powered by Blogger.