Header Ads



"தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம்"


தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என்று வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான நிலை ஏற்படலாம். தடுப்பூசி கிடைத்தவுடன் சகல பகுதிகளுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார துறை அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கியுள்ள சில சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இடம்பெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சில மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது. 

மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த மட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில சலுகைகளை அரசாங்கம் வழங்கி இருந்தாலும் அவற்றை சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த விடயம் பற்றி பொறுப்புடன் செயற்படுமாறு அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.