Header Ads



மம்தாவின் அமைச்சரவையில் 7 இஸ்லாமியர்கள்


மேற்கு வங்காளம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 43 பேர் அடங்கிய அமைச்சரவை இன்று -10- பதவி ஏற்றுக்கொண்டது.

43 பேர் கொண்ட அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஐந்து பேரை கேபினட் அமைச்சர்களாகவும், இரண்டு பேருக்கு இணை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கி கவுரவித்துள்ளார்.

மேற்கு வங்காளம்  ஜமாஅத்துல் உலமா ஹிந்த் மாநில தலைவர் மவுலவி சித்தீக்குல்லா சவுத்ரி க்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு கொடுத்து தேர்தல் வெற்றிக்கு பெருமளவில் வாக்களித்த முஸ்லிம் சமூகத்திற்கு உரிய கண்ணியத்தை வழங்கியுள்ளார்.

மேலும், மேற்கு வங்காளத்தின் TMC மூத்த அரசியல்வாதிகளான 

முகமது குலாம் றப்பானி

ஃபர்ஹாத் ஹக்கீம்

ஜாவேத் அஹ்மத் கான்

ஹுமாயூன் கபீர் (முன்னாள் ஐபிஎஸ்)

ஆகியோர் காபினட் அமைச்சராகவும்

முகமது அகுருஸ்ஸமான்

சபீனா யாஸ்மின்

ஆகியோரை இணை அமைச்சராகவும் நியமித்ததன் மூலம் மம்தா பானர்ஜி மாநில முஸ்லிம்களுக்கு தனது ஆதரவையும் உரிய கவுரவத்தையும் வழங்கியுள்ளார்...

Colachel Azheem

No comments

Powered by Blogger.