Header Ads



இன்று 4 கொரோனா மரணங்கள் நீர்கொழும்பில் பதிவு - அபேசிங்கபுர ஜனாஸா ஓட்டமாவடி செல்கிறது


Ismathul Rahuman -

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த 4 கொரோனா தொற்றாளர்கள் இன்று 12ம் திகதி மரணமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு வைத்திய சாலையில் ஒரே நாளில் கொரோனாவினால் கூடுதலானவர்கள் மரணமடைந்த சம்பவம் இதுவாகும். மரணமடைந்த நால்வரும் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வார்ட்டில் 70 பேரளவில் கோவிட் 19 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கட்டில் வசதியின்றி சில நோயாளிகள் நிலத்திலும் உறங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அபேசிங்கபுரத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்ஒருவர் கடந்த 9ம் திகதி வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மரணமானார்.

இவர் ஏற்கனவே சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு மேற்கொள்ளப்பட்ட "என்டிஜன்" பரிசோதனையில் "பொசிட்டிவ்" என கண்டறியப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் நோய் அதிகரித்து சுவாசிக்க கஷ்டப்படவே நீர்கொழும்பு வைத்தியசிலையில் ஆனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.

நீர்கொழும்பு அபேசிங்கபுரத்தைச் சேர்ந்த இவரது ஜனாஸாவின் பிரேத பரிசோதனை இடம்பெற்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடாகியுள்ளது.

இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரணமடைந்த நால்வரினதும் பூதவுடல்கள் நீர்கொழும்பு சுகாதார பிரிவினரால் இன்று மாலை நீர்கொழும்பு சேமக்காலையில் தகனம் செய்யப்பட்டதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.