Header Ads



கொட்டாவ வெளியேறல் பகுதி (Exit point) இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை மூடல்


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி  (Exit point) இன்று (28) காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேற்படி வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பேருந்து மற்றும் அம்பியூலன்ஸ்களுக்காக கொட்டாவ வெளியேறல் பகுதி திறக்கப்படும் அதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வெளியேறல் பகுதிகள் ஊடாக பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கொட்டாவ நுழைவாயில் (Entry Point) வழியாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்க முடியும் எனினும், பற்றுச்சீட்டு வழங்கப்படமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.