Header Ads



ஹரீனுக்கு எதிராக நீதிமன்றில் இன்று வழக்கு - கைது செய்வதில் சிக்கல் உள்ளதென்கிறார் ரணில்


நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வது பிரச்சினையானது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில், அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றிருந்தார்.

இதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்படுவது தொடர்பில் தற்போது பிரச்சினை உள்ளது.

ஏனெனில், முதலில் காரணமாக குறிப்பிட்ட விடயம் ஏப்ரல் 21 தாக்குதலாகும்.

எனினும், அமைச்சின் விடயமொன்று தொடர்பில், நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலாயின் அதுகுறித்து செயற்பட வேண்டும் அல்லது இந்த விடயம் தொடர்பில் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தம்மை கைது செய்வதற்கான தயார்ப்படுத்தல் உள்ளமையினால், தாம் அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர்நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.