Header Ads



பாகிஸ்தான் ரசிகர்கள் கொதிப்பு, தென்னாபிரிக்க வீரர் மீது ஆத்திரம், பாகர் ஜமன் ஏமாற்றப்பட்டதாக கவலை


பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இப்போட்டியில் குயிண்டன் டி காக் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் பலரையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ஓட்டங்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகமபட்சமாக டெம்பா பாவுமா 92 ஓட்டங்களும், குயிண்டன் டி காக் 80 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 50 ஓட்டங்களும் குவித்தனர்.

அதன் பின் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்கள் எடுத்து, 17 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் பாகர் ஜமன் 155 பந்தில் 193 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் 49-வது ஓவரில் குயிண்டன் டி காக் ஏமாற்றி அவரை ரன் அவுட் ஆக்கினார்.

இது ஒரு ஜெண்டில் மேன் கிரிக்கெட்டிற்கு அழகில்லை, இப்படியா வெற்றிக்காக? செய்வது. கிரிக்கெட் விதிப்படி பார்த்தால், ஒரு வீரரை ஏமாற்றி இப்படி செய்தால், அபராதமாக 5 ஓட்டங்கள் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் அதை பதிவிட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.