Header Ads



பாக்கிஸ்தானின் விராட் கோலி...


- Ayyappan -

2016 இருக்கும் அப்ப பாக்கிஸ்தான் கோச் மிக்கி ஆர்தர் சொன்னார் , பாபர் அசாம் தான் பாக்கிஸ்தானின் விராட் கோலி இவர் தான் டீம்மின் நட்சத்திர பேட்ஸ்மேனா இருக்கப்போறார்னு உடனே பயங்கர கேலிகள் ஆரம்பிச்சுடுச்சு எப்படி நீங்க இவரை கோலியோட கம்பேர் பண்ணலாம் .

கோலி பேட்டிங் ரெக்கார்ட் என்ன உயரத்துல இருக்கு இந்த பையன் எங்க இருக்கான்னு ஏகப்பட்ட எதிர்கேள்விகள் அது சில வருஷம் தொடரவும் செஞ்சது ஆனா வருஷம் செல்ல செல்ல மிக்கி ஆர்தர் சொன்னது கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சது 

அரைசதங்கள் வர ஆரம்பிச்சது , அரை சதங்கள் சதங்களாக மாற ஆரம்பிச்சது , பேக் புட் டிரைவ்கள் கண்ணை கவர ஆரம்பிச்சது Fab 4 ஐ Fab 5 என மாற்றி கூறவைத்தது

இப்படி அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் பாபர் அசாம்க்கு பாக்கிஸ்தானின் கேப்டன் பதவியைவே வாங்கி கொடுத்தது.

சின்ன டீம் கூட அடிப்பார் பெரிய டீம் கூட அடிக்க மாட்டார் இது சமீபகாலமாக வைக்கப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு சரி இது உண்மையானு பார்த்தா எல்லா பெரிய டீம்களோடையும் சதமடிச்சிருக்கார் இந்தியாவை தவிர.

இந்த தொடரில் முதல் போட்டியிலே சதம் அடிச்சு அசத்திய பாபர் இன்னிக்கு 36 ரன்களை கடந்ததின் முலமா, ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 என்ற இடத்தை 4 வருஷமா கோலியிடம் இருந்த பட்டத்தை தட்டி பறிச்சிருக்கார் .

சரி நம்பர் 1 இடத்தை அடைஞ்சதின் முலமா விராட் கோலியின் இடத்தை பிடிச்சிட்டாரா அவரோட கம்பேர் பன்ற அளவுக்கு எல்லாம் வந்துட்டாரானு கேட்டா பதில் இல்லை , 3800 ரன் அடிச்சவரை எப்படி 12500 ரன் அடிச்ச லெஜன்ண்டோட கம்பேர் பண்ண முடியும் ? 

பாபர் அசாம் இன்னும் ஆடட்டும் போக வேண்டிய தூரம் ரொம்பவே இருக்கு விராட் கோலி செட் பண்ணி வச்ச , இன்னும் வச்சுக்கிட்டு இருக்க மைல்கற்களை எல்லாம் ஒன்னு ஒன்னா உடைக்கட்டும் அதுவரை அவர் பாபர் அசாமாகவே இருக்கட்டும் , கோலியோட எல்லாம் அவரை கம்பேர் பண்ணாதிங்க .

வேணும்னா 4 வருஷத்துக்கு முன்னாடி மிக்கி ஆர்தர் சொன்ன அந்த வார்த்தையும் நம்மளும் சொல்லலாம் பாபர் அசாம் பாக்கிஸ்தானின் விராட் கோலி என்று



No comments

Powered by Blogger.