Header Ads



நாங்கள் கஷ்டப்பட்டு செயற்படுவதால் இலங்கையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது - பவித்ரா


கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உலகில் தற்போது கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. எமது அயல் நாடான இந்தியாவில் தினமும் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

நாங்கள் கஷ்டப்பட்டு செயற்படுவதன் காரணமாக தற்போது இலங்கையில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. குணமடைந்து ஊர்களுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாங்கள் சரியாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.

இதேபோல் எதிர்க்கட்சிகள் எமது தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக குற்றம் சுமத்தின எனவும் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. இன்னொருமுறை அந்த பாணியையும் குடித்து, பிரித் வதுர குடத்தை மீண்டும் ஆற்றில் எறிந்துவிட்டால் எஞ்சிய கோரோனா அனைத்தும் ஒழிந்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.