Header Ads



இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றி நல்லெண்ணம் கொண்டு அல்குர்ஆனை முழுமையாக வாசித்து, Muslim law என்ற நூலை எழுதிய கருணாரத்ன ஹேரத் காலமானார்


"முஸ்லீம் சட்டம்"   புத்தக ஆசிரியரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், மூத்த வழக்கறிஞருமான கருணாரத்ன ஹேரத் அவர்கள்  2014ஆம் ஆண்டு எகிப்து நாட்டுக்கு வருகை தந்த போது அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் உள்ள  இலங்கை மாணவர்கள் ஒன்றியத்தின் சார்பாக அவரை சந்திப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. 

 இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் மிகத் தெளிவான அறிவுப் பின்புலமும், நல்லெண்ணமும் கொண்டவர்  என்பதை அவருடன் உரையாடும் போது அவதானிக்க முடிந்தது.

இறுதியில் அவர் எழுதிய  Muslim law என்ற புத்தகத்தை எமக்கு அன்பளிப்பாகவும் தந்தார்.

அதுமட்டுமல்லாது மிகப்பழமை வாய்ந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தை தரிசித்து அதன் சட்ட பீட தலைவரையும், சட்டத்துறை வல்லுனர்களையும் சந்தித்து அவர் எழுதிய "Muslim law" என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அன்பளிப்பு செய்தார்.

எகிப்தில் உள்ள புத்தகக் கடைகளுக்கு கூட்டிச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார்.அங்கு அதிகமான அரபுமொழி புத்தகங்கள் இருந்தாலும் கூட அவற்றை ஆவலுடன் பார்த்து அவை  பற்றி அதிகமாக கேட்டறிந்து கொண்டார். 

"தான் அல்குர்ஆனை முழுமையாக வாசித்து உள்ளதாகவும் ஹதீஸ் புத்தகங்களை முழுமையாக வாசிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளதாகவும் கூறினார்"

பன்மைத்துவ சமூக அமைப்பை கொண்ட இலங்கை நாடானது சக வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த ஒருவரை இருந்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

Irfan Shihabdeen(Azhary)

1 comment:

  1. Markkathaiyum thaliwi erunthal Allahwum nadierunthal suwarkkamthaan.

    ReplyDelete

Powered by Blogger.