Header Ads



CTJ அரசியலில் குதிக்கிறது..? 43 தௌஹீத் அமைப்புகளுக்கு தடை, இஸ்லாமிய இயக்கங்களின் பதிவுகளும் ரத்து


சிலோன் தௌஹீத் ஜமாஅத் சார்பில் ஜனநாயக ரீதியிலான சமூக முன்னெடுப்புகளுக்காக அரசியல் கட்சியொன்று ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருவதாக  ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிய வருகிறது.

கடந்த 04/21 தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளிவந்துள்ள நிலையில் 43 தௌஹீத் அமைப்புகள்  தடை செய்வதற்கான பட்டியலில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் கடந்த 04/21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தினதும் பதிவுகள் உடனடியாக அமுலாகும் விதத்தில் ரத்து செய்யப்பட்டன. 

தற்போது இஸ்லாமிய அமைப்புகள் பதிவுகளுக்கு பெரும் சிக்கள் நீடிக்கும் நிலையிலும், குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கைதுகள் நிகழ்வதினாலும் ஜனநாயக நீரோட்டத்தில் கடந்த காலங்களைப் போல் பகிரங்கமாக செயல்படுவதின் மூலம் சமூக நலன்சார் வெற்றிகளையும், பாதுகாப்பையும் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அரசியல் பிரிவொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற CTJ யின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதற்கான அங்கீகாரமும் கிளை நிர்வாகிகளிடமிருந்து கிடைத்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில் CTJ சார்பில் தொடர்ந்தும் முஸ்லிம் உரிமைகளுக்கான குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தான் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சிலோன் தௌஹீத் ஜமாத்தினர் முன்நகர்வது தெரிய வருகின்றது.

2 comments:

Powered by Blogger.