Header Ads



சுக்ரா முனவ்வருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய, வீட்டுக்குரிய உபகரணங்கள் வழங்கி வைப்பு


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'இலட்சாதிபதி' ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது கல்வித் திறமையால் ஓரிரவில் இலட்சாதிபதியாகி புகழின் உச்சத்திற்குச் சென்ற 17 வயது பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வரை, ஏ.ஜே.எம். முஸம்மில் பவுண்டேஷன் 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பரிசுப்பொதிகளையும் வழங்கிவைத்தார்.

அதேவேளைத் தனவந்தர்களின் உதவியுடன் சுக்ரா முனவ்வருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டுக்குத் தேவையான வீடு உபகரணங்களும் பெரோஸா முஸம்மில் அம்மையாரினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அம்மையாரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையின் முதல்தர வர்த்தகரான  தம்மிக்க பெரேராவின் அறக்கட்டளை அமைப்பான 'தம்மிக்க பெரேரா பவுண்டேஷன்' இனால் மாணவி சுக்ரா முனவ்வர் கல்விபயிலும் காலி சுதர்மா கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள 'Digital Classroom' தொடர்பிலான கடிதமும் பெரோஸா முஸம்மில் அம்மையாரினால் காலி சுதர்மா கல்லூரியின் அதிபர் சரத் லியனகே அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் முஸ்லிம் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உவைஸ் ஹாஜி அவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் காலி மாவட்ட  முஸ்லிம் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ராஸிக் ஹாஜியார் அவர்களும்,  'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் செயலாளர் இஷாரா பிரியதர்சினி மற்றும் மாணவி சுக்ரா முனவ்வரின் தயார் காமிலா முனவ்வார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- Media Unit -



2 comments:

  1. Ellarum Sukra munaweruku mattume uthavi saithu photo pottu puhalukkaha mattum waalamal samoohathil ethanayo per mihavum kastathudan walhinrarhal.appadi kastapadum makkalai thedi uthavi saithu marumayil vetri perungal

    ReplyDelete
  2. Intha shukrawukka mashallah,Matra shukrakkal samuhathil innum errukirarhal awarhalaium thaedi uthawi seyungal.

    ReplyDelete

Powered by Blogger.