Header Ads



புர்கா மத தீவிரவாதத்தின் குறியீடு, எனது சிறுவயது முஸ்லீம் நண்பர்கள் புர்கா அணியவில்லை - சரத் வீரசேகர


இலங்கையில் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது தீர்மானத்திற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் புர்கா இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகி;ன்றது என குறிப்பிட்டுள்ளார்.

எஙகளது சிறுவயதில் பல முஸ்லீம் நண்பர்கள் எங்களுக்கு இருந்தனர் அவர்கள் புர்கா அணியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புர்கா என்பது மத தீவிரவாதத்தின் குறியீடு என தெரிவித்துள்ள அமைச்சர் சமீபத்திலேயே இதனை பலர் பயன்படுத்த ஆரம்பித்தனர் ஆகவே இது நிச்சயமாக தடை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

2 comments:

  1. they didn't wear because they don't have enough Islamic knowledge, we suspect who is your your Muslim friend, you are racist B***d you never go and get true Islamic friend,

    ReplyDelete
  2. புர்க்கா- நெருப்போடு விளையாடல்

    இஸ்லாத்தை எதிர்க்கும்
    இனவாதப் பயணம்
    எம்மவர்க்கோ
    புரியாத புதினம்.

    சிறுபான்மைச் சமூகமதின்
    ஜனாஸா உரிமையை
    சரிகண்ட எம்மவன்
    அதே சமூகத்தின் சிறுபகுதியினரின்
    முகத்திரை மீதான விருப்பை
    வெறுக்கிறான்.
    இவனுக்கு புரியவில்லை
    மனிதவுரிமை மீதான சமனிலை.

    இறைதிருப்தி கருதி பண்புடன் தன்வதனமதை மறைக்கும்
    மங்கையரின் சாபம்
    சாமான்யப் பெண்ணின்
    சாபத்தை போன்றல்ல;
    அது எரித்துவிடும்
    அவர்கள் கண்ணீருக்கு காரணமானதை.
    விரைவாக வரவழைத்துவிடும்;
    இறைவனின் அக்கினிப் பார்வையதை.

    அதிகாரத்திற்காய் சமர் செய்பவர்களே!
    சாமரம் வீசுபவர்களே!
    பயந்திடுங்கள்;
    நீங்கள் விளையாடுவது நெருப்போடென்றெண்ணி.

    ReplyDelete

Powered by Blogger.