Header Ads



கொரோனா தடுப்பூசி போட்டால், ஆண்டு முழுவதும் டோனட் இலவசம்


கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் இன்னும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல டோனட் (ஒரு வகை இனிப்பு தின்பண்டம்) தயாரிப்பு நிறுவனமான ‘கிரிஸ்பி கிரீம்' நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் டோனட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.‌ இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தடுப்பூசி அட்டையை காண்பித்து, தனிநபராக எங்கள் கடைக்கு வந்து தினந்தோறும் இலவச டோனட்டை பெற்றுச்செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்த சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம். அமெரிக்கா முழுவதும் உள்ள எங்களது அனைத்து கடைகளிலும் இந்த சலுகை உண்டு.‌ அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிடவில்லை. எனினும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24 வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும், காபியும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.‌

இந்த அறிவிப்பால் அமெரிக்கா முழுவதும் உள்ள ‘கிரிஸ்பி கிரீம்' கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

No comments

Powered by Blogger.