Header Ads



இன்றைய ஊடக சந்திப்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த முக்கிய கருத்துக்கள்.


இன்று(30) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துக்கள்.

ஜெனீவா விவகாரம் குறித்து எதிர்க் கட்சியினர் பிழையான விம்பங்களை ஏற்படுத்துவதாக நோற்று ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கையில் ஏதும் ஏற்படாதது போல் பூகோள மேற்கு சீன மோதலுக்காக இலங்கையை இவ்வாறு பயன்படுத்தியாதான ஓர் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக அரசாங்கம் பேசுகிறது.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்களித்த நாடுகளை பிராந்திய ரீதியாக சுட்டிக் காட்டி சம்ரதாயமாக இலங்கைக்கு வாக்களிக்கும் நாடுகள் கூட இம் முறை வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டதாக சுட்டிக் காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக இதை அரசியல் காலணியாக பயன்படுத்தாமல் இதிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் எனக் குறிப்பிட்ட அவர் இது தொடர்பாக சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த நுலைப்பாட்டை மீள ஞாபகப்படுத்தி இது தான் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்தார். 

மனித உரிமைகள் போரவையில் மைன்வைக்கப்ட்ட பெரும்பாலான குற்றச் சாட்டுக்கள் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த கடந்த கால ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பானவைக்காகும். நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக ரீதியான பாதுகாப்பின் பொறுப்புக் கூறலின் பக்கம் முன் நிற்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கியம்,இறைமை,அரசியல் சுதந்திரம் மற்றும் ஒற்றையாட்சிக்குள் கூடியளவு அதிகாரப் பரவலாக்கம் அதாவது 13 ஆவது திருத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் நிற்ப்போம். அதே போல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பான் கீன் மூன் ஆகியோரிடையே ஏறபடுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட உள்ளக பொறிமுறைகளான LLRC மற்றும் பரனகம ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு நாங்கள் பூரன ஒத்துழைப்பு வழங்குவோம். சர்வதேச அங்கீகாரமுள்ள வெளிப்படைத் தன்மையான உள்ளக பெறிமுறையாக அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமைந்துள்ளது. 

இந்த அரசாங்கம் LLRC மற்றும் பரனகம ஆணைக்குழுக்களை நடைமுறைப்படுத்தினால் இந்த மனித உரிமைகள் பிரச்சிணைகளிலுருந்து வெளி வரலாம். 

இரானுவம் எந்த ஒரு இனக் குழுவையும் இலக்கு வைத்தோ அல்லது திட்டமிட்டோ தாக்கவில்லை என்றும் இரானுவ அதிகாரிகள் குற்றமிழைத்தவர்கள் போன்றோ LLRC அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆனால் சில தனி நபர்களின் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள் மோற்கொள்ள ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வளவு தான். இதை நடைமுறைப்படுத்துவதுதான் எங்களுடைய நிலைப்பாடு. முற்றிலும் இந்த ஆணைக்குழுக்கள் தற்போதைய பிரதமரின் காலத்தில் உருவாக்கப்ட்டவைகளாகும். ஏன் பின்வாங்கள். 

LLRC இல் இன்னெரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணா அம்மான் 600 பொலிஸ் அதிகாரிகளை திட்டமிட்டு முலேச்சத்தனமாக கொலை செய்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. இன்று அவருக்கு அரசியல் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய பெறுப்பற்ற பெறுப்புக் கூறல்கள்களே ஜெனீவா விடயங்களில் பிரதிபலிக்கிறது.

அர்ப அரசிலுக்காக ஜெனீவா விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கையாளாது. 

அடுத்த விடயம் தற்போது போசு பொருளாக இருக்கும் தரமற்ற தோங்காய் எண்னெய் குறித்தாகும்.இந்த விடயம் வெறுமனே 13 கனரக கொள்கலன் வாகனங்களோடு மாத்திரம் மட்டுப்பட்ட ஒன்றல்ல. இது நாடு பூராகவும் பரவியுள்ளது.சந்தையில் பரவியுள்ளது. இலங்கை தர நிர்ணய சபைத் தலைவரை நாங்கள் சந்தித்தோம், அவர் மேற்கொண்ட முதலாம் இரண்டாம் பரிசோதனைகளில் தரமற்ற புற்று நோய் ஏற்படுத்தக் கூடிய பெலொடொக்சின் வழமையை விடவும் மூன்று நான்கு மடங்கு அதாவது நூற்றிற்கு 30% 40% பெலொடொக்சின் தன்மையுள்ள தேங்காய் எண்னெய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.நஞ்சு தன்மை உள்ளது.மனித நுகர்விற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இது Tip of Ice Break போன்று கடலிலுள்ள Ice படிமங்கள் மேலோட்ட பார்வைக்கு தொரியும் அளவு கண்களுக்கு புலப்படும் அளவுடன் முடியும் விடயமல்ல, ஆழ் கடல் வரை அந்த Ice படிமங்கள் இருக்கும். அது போன்று தான் தேங்காய் எண்னெய் விடயமும்,இது வெறுமனே கண்களுக்கு புலப்படும் பிடிபடும் 13 கனரக கொள்கலன் வாகனங்களுடன் மாத்திரம் சுருங்கிய ஒன்றல்ல.

தேய்காய் எண்னெய் விவகாரம் குறித்து இரண்டு விடயங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வேண்டிக் கொள்கிறோம். 

01. நாடளவிய ரீதியாக பரிசேதனை மாதிரிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.சந்தையிலுள்ள மற்றும் நாடளாவிய களஞ்சியங்களிலுள்ள சகல இடங்களிலும் இவை மேற் கொள்ளப்பட வேண்டும்.

02.தொகைக் கணக்கில் தேங்காய் எண்னெய் இறக்குமதியை உடனே தடை செய்து SLS தரமிக்க தேங்காய் எண்னெய்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

இதன் பரவல் குறித்து (Reusability)குறித்த  ஆய்வு செய்து இந்தப் புத்தாண்டு காலத்தில் நுகர்வோரின் அச்சம் நீக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.யார் இறக்குமதி செய்தது? எப்படி செய்தது? சந்தைக்கு எப்போது சென்றது? போன்ற பரவல் குறித்த விடயங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று ரூபாவின் பொருமதி வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.மத்திய வங்கியின் பிரகாரம் நோற்று மாலை விற்பனை விலை 201.1 ரூபாவாகும்.இன்று காலை 204.15 ஆக உயர்ந்துள்ளது.இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த நிலையான திட்டங்களும் இல்லை எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.