Header Ads



யாழ் ஒஸ்மானியாவின் புதிய அதிபர் அல்ஹாஜ் KMM அனீஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு வடக்குமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த அதிபர் அல்ஹாஜ் கே.எம்.எம். அனீஸ் இன்று (10) தனது அதிபருக்கான கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பாடசாலை பிரதி அதிபர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் அதிபரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் பாடசாலையை முழுமையான கள விஜயம் ஒன்று மேற்கொண்டு பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இணைப்பாளரும், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகரும், வை.எம்.எம்.ஏ நிறுவனத்தின் வடக்குமாகாண பணிப்பாளருமான ஜனாப் ரசூல் ஜெமீல், வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப் எஸ்.எம். ஞாபிர் அவர்கள், வவுனியா ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப் என். மாஹிர் அவர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.  

தகவல் 

என்.எம். அப்துல்லாஹ் 

No comments

Powered by Blogger.