Header Ads



ஜெனீவாவில் மேற்குலகின் எதிர்ப்பை முறியடிக்க, ஏனைய நாடுகளின் ஆதரவை நாடியுள்ள இலங்கை


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்விற்காக இந்தியாவினதும் உலக நாடுகளினதும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.

முகன்மை நாடுகளின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 15 நாடுகளின் ஆதரவை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இலங்கை அரசாங்கத்தின் மிக முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் உதவியை முதலில் இலங்கை நாடியது என தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் மிக முக்கிய வட்டாரங்கள் இந்தியா இலங்கையின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளன.

சீனாவும் ரஸ்யாவும் ஏற்கனவே இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்காவி;ன் பிளக்லைவ்ஸ் மட்டர் இயக்கத்தினை கருத்தில்கொண்டு ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.

No comments

Powered by Blogger.