Header Ads



திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்காக புதிய திட்டம்


இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று போன்ற அனர்த்தங்களின் போது நாட்டை மூடி வைத்தல் அல்லது திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாாதுகாப்பு விதிமுறை ஒன்றை, இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல வெளிநாடுகளில் அவ்வாறு தொழில் இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு காப்புறுதி ஒன்று வழங்கப்படுகின்றது.

கொரோனா தொற்றின் காரணமாக வருமானம் இழந்தவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 80 வீதம் கிடைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு நிதி முறையின் கீழ் அவ்வாறு விசேட காரணத்திற்கமைய இலங்கை மக்கள் தொழிலை இழந்தால் அந்த வருமானத்தில் 70 - 80 வீதத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச தொழில் அமைப்புடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பொருத்தமான முறை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களும், நாளாந்தம் வருமானம் பெறும் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த பாதுகாப்பு நிதி வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.