Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக என்னை மாற்றியுள்ளனர் - ஞானசாரர் புலம்பல்


ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கை சூழ்ச்சிகரமான மாற்றியது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ தொடர்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எப்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது.

எனினும் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக என்னை மாற்றியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வர வேண்டும் என்பது ராஜபக்சவினரின் எதிர்பார்ப்பு.

அதற்கு சவாலான அனைவரையும் அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அடபாவமே அப்பாவியான இம்மனுசர எப்படி மாட்டிவிட்டுள்ளனர் பாருங்க.

    ReplyDelete

Powered by Blogger.