Header Ads



400 மில்லியன் டொலர்களை மீளச்செலுத்திய இலங்கை


இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி மேலும் அறிவித்திருந்தது.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர்கள் கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கியிருந்த கால எல்லையை நீடிப்பதற்கு இந்தியா தீர்மானிக்கவில்லை எனவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையை மீறியிருந்தமை காரணமாக, இந்த தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருந்ததாக இராஜதந்திர மூலங்களை மேற்கொள்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

3 comments:

  1. பேருவலையில் இருந்து இரவு வந்த ஹாஜியார் இந்த பணத்தொகையை மத்திய வங்கியின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றதாகவும் உடனே பார்த்தபோது அந்த கோணியில் நானூறு மில்லியன் அ​மெரிக்க டொலர் இருந்ததாகவும் உடனே அந்த பணத்தை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொண்ட கடனைச் செலுத்தியதாகவும் நாட்டு பற்றுமிக்க இலங்கையர்கள் கூறினார்கள்.

    ReplyDelete
  2. சீனாவுல லோத்தர் டிக்கெட் ஏதும் வாங்கி லாட்டரி விழுந்திருக்குமோ ?

    ReplyDelete
  3. குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்.

    ReplyDelete

Powered by Blogger.