Header Ads



24 மணித்தியாலங்களுக்குள் அனைத்து இறுதி சடங்கையும் நிறைவு செய்தல் வேண்டும், திருமணத்தில் 50 பேருக்கே அனுமதி - புதிய விதிகள் அறிமுகம்


24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதனை 50 ஆக மீண்டும் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இது என்ன இஸ்லாமிய முறைப்படி அவசரமாக அடக்கம் செய்யப்போகிறீரா? துறவிகளும் அவர்கள் சார்ந்தோரும் எதிர்ப்பார்களே.

    ReplyDelete

Powered by Blogger.